நீச்சல் உடற்பயிற்சியில் மோகம் கொண்ட நியூயார்க் இளைஞர்கள்…
நியூயார்க்: நியூயார்க் இளைஞர்களிடையே சிறிது காலமாக நீச்சல் உடற்பயிற்சி மீதான மோகம் அதிகரித்து வருகின்றது.
பொதுவாக அதிக உடல் எடை கொண்டவர்கள் அல்லது காயத்தினால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்கள் போன்றோர் தண்ணீரில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைப் பெறுவார்கள்.
ஆனால், தற்போதோ இளைஞர்களிடையே இத்தகைய நீச்சல் உடற்பயிற்சி மோகம் அதிகரித்து வருகின்றது.

தசையை இயக்கும் நீச்சல்:
அக்வா சும்பா, பூட் கேம்ப் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் பயிற்சிகள் ஆகிய இந்த மூன்றும் ஒவ்வொரு தசையையும் இயக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர்கள் இத்தகைய முழுமையான இயக்கத்தை உணரமுடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பகலில் முதியவர்கள்:
பகல் நேரங்களில் நடைபெறும் உடற்பயிற்சி வகுப்புகளில் முதியவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும், மாலை நேர வகுப்புகளில் இளைஞர்கள் விருப்பம் காட்டுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இத்தகைய பயிற்சிகளை அளித்துவரும் லோரி ரோஸ் பென்சன் கூறுகின்றார்.

பாட்டு கேட்டுகிட்டே பயிற்சி:
இசையுடன் கூடிய விரிவான நீச்சல் முறைகளும், சில பயிற்சி வகைகளும் இணைந்த இந்த நீச்சல் வகுப்பானது புரூக்ளின் நகர இளைஞர்களின் விருப்பத்தேர்வு என்று லோரி குறிப்பிடுகின்றார். அதேபோல் சுவிமிங் பார்ட்டி என்று கூறப்படும் அக்வா சும்பா வகுப்புகளும் இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக இவர் தெரிவிக்கின்றார்.

இதய பயிற்சி நன்மை:
கடினமான இதயப் பயிற்சிகளை மேற்கொள்வோருக்குக் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் இந்த நீச்சல் உடற்பயிற்சியில் பெறமுடியும் என்று லோரி குறிப்பிடுகின்றார்.

உடலை உரமாக்கும் நீச்சல்:
ஒரு மணி நேர நீண்ட இடைவெளியில் உடற்பயிற்சிகளுடன் வாரத்தில் மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த நீச்சல் உடற்பயிற்சிகள் உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய தசைக்கும் பயிற்சி அளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறுகின்றார்.

உடற்பயிற்சி சிறந்தது:
இங்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் பீட்டர்ஸ் என்பவர் தண்ணீரில் கிடைக்கும் இத்தகைய உடற்பயிற்சி நன்மைகளை தரையில் செய்யும் எந்த கருவிகளும் இதுவரை கொடுத்ததில்லை என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications