ஃபேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்திய நியூயார்க் தாக்குதல்தாரி
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பேருந்து முனையத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரப்பை எச்சரிக்கும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
''உங்கள் நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் டிரம்ப்'' என அந்த பதிவு கூறுகிறது. செவ்வாய்க்கிழமையன்று அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, அகாயத் உல்லாவின் பதிவு குறித்த தகவல் வெளிவந்தது.
ஐ.எஸ் குழுக்களால் ஈர்க்கப்பட்ட 27 வயதான வங்கதேச குடியேறியான அகாயத் உல்லா, வெடிகுண்டினை உடலில் சுமந்து வந்து வெடிக்கச் செய்தார்.
திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை அகாயத் உல்லா தன் உடலில் சுற்றிவந்து வெடிக்கச் செய்தார்.
இந்த தாக்குதலில் அவரும் மற்ற மூவரும் காயமடைந்தனர்.
தீவிரவாத செயலுக்கு ஆதரவளித்தது, தீவிரவாத அச்சுறுத்தல் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அகாயத் உல்லா எதிர்கொண்டுள்ளதாக நியூயார்க் போலீஸார் ட்வீட் செய்துள்ளனர்.
''ஐ.எஸ் அமைப்புக்காக நான் இதைச் செய்தேன்'' என கைதுக்கு பிறகு அகாயத் உல்லா கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தல் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தான் தூண்டப்பட்டதாக அகாயத் உல்லா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக ஆவணங்கள் கூறுகின்றன.
இந்த வெடிக்கும் சாதனத்தை தயாரிக்க கிருத்துமஸ் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை உல்லா பயன்படுத்தியதாக புகார் கூறுகின்றது. வெல்க்ரோ பட்டையின் உதவியால் இந்த சாதனத்தை உடலில் இணைத்துள்ளார்.
அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் வங்கதேசம் வந்ததாகவும் வங்கதேச அரசு கூறியுள்ளது.
பிற செய்திகள்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- காதலனை கணவனாக உருமாற்ற நடந்த கொடூர நாடகம்
- பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் டிரம்ப் இணைப்பார்: பிரான்ஸ் நம்பிக்கை
- அமெரிக்கா: முன்னாள் நீதிபதியான டிரம்ப் கட்சி செனட் வேட்பாளர் மீது பாலியல் புகார்
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்













Click it and Unblock the Notifications