நியூயார்க் டாக்டரை தாக்கிய 'எபோலா' வைரஸ்: பீதியில் மக்கள்
நியூயார்க்: கினியாவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க டாக்டரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்நிலையில் கினியாவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அமெரிக்க டாக்டர் கிரெய்க் ஸ்பென்சர்(33) கடந்த 14ம் தேதி அமெரிக்கா திரும்பினார்.

நியூயார்க்கில் வசிக்கும் அவருக்கு கடந்த 21ம் தேதியில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அவருக்கு 103 டிகிரி காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட எபோலாவின் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து நியூயார்க்கில் உள்ள பெலுவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நியூயார்க் மேயர் கூறுகையில்,
நியூயார்க் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ஒரே தெருவில் வசிப்பதாலோ, எபோலா நோயாளி வீட்டுக்கு அருகே இருப்பதாலோ யாருக்கும் எபோலா வந்துவிடாது என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications