நியூயார்க் அருகே ஜீப் மீது மோதிய ரயில் தீப்பிடித்து எரிந்தது! பயணிகள் 5 பேர் உட்பட 6 பேர் பலி!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் அருகே ஜீப் மீது ரயில் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூயார்க்கில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்கல்லா என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று நியூயார்க் சிட்டி மெட்ரோ வடக்கு ரயில்ரோடு செய்தித் தொடர்பாளர் ஆரோன் டோனோவன் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களில் 5 பேர் ரயிலில் பயணித்தவர்களாகும். மற்றொருவர் ஜீப்பை ஓட்டிச் சென்ற பெண்மணி. அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நடந்துள்ளது.

ரயில் தண்டவாளத்தை ஜீப் கடக்க முற்பட்ட அதே நேரத்தில், சாலையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே (தானியங்கி) கேட் வந்து மூடியுள்ளது. ஜீப்பின் மேல் கேட் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த ஜீப்பை ஓட்டிச் சென்ற பெண் கீழே இறங்கி ஜீப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துள்ளார். அதன்பிறகு ஜீப்பை கிளப்பிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். ஆனால் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை.
எனவே ஜீப் மீது ரயில் மோதி அதை தரதரவென இழுத்துச் சென்றது. இதில் ரயிலின் முன்பகுதியில் தீ பிடித்தது. இவ்விபத்தில் ரயிலில் பயணித்த 5 பேரும், ஜீப் ஓட்டிய பெண்ணும் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். ரயிலில் இருந்த பயணிகள், இதை பார்த்ததும் அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.
சுமார் 400 பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டு பஸ்கள் மூலம் சேர வேண்டிய பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications