நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் 29 நிமிடங்களில்... எலன் மஸ்கின் ஹைப்பர் லூப் திட்டத்திற்கு அனுமதி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்(யு.எஸ்): டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கின் புதிய போக்குவரத்து திட்டமான ஹைப்பர் லூப் மூலம் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் டிசிக்கு 29 நிமிடத்தில் வந்து விடலாம். இது விமானப் பயண நேரத்தை விட குறைவானதாகும்.

எலன் மஸ்கின் கனவுத் திட்டமான ஹைப்பர் லூப் சோதனைத் திட்டம் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை இணைக்கும் இந்த திட்டத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைப்பர் லூப் திட்டத்தை ஏனைய நாடுகளிலும், ஏனைய அமெரிக்க நகரங்களிலும் விரிவு படுத்த எலன் மஸ்க் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

New York - Washington in 29 minutes by Hyperloop

நியூயார்க் - பிலடெல்பியா- பால்டிமோர் - வாஷிங்டன் டிசி வழித்தடத்தில் தரைக்கு அடியில் ஹைப்பர் லூப் திட்டம் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் வாய்மொழி ஒப்புதல் கொடுத்துள்ளதாக எலன் மஸ்க் கூறியுள்ளார்.

இன்னும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது. திட்டமிடுதல் தேவைப்படுகிறது. முறைப்படி அனுமதி விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.

New York - Washington in 29 minutes by Hyperloop

மினி வேன் சைஸில் உள்ள பயணிகள் இருக்கைகள் கொண்ட விண்வெளி கேப்சூல் போன்ற வாகனத்தை, காற்றுவெளி இல்லாத பெரிய ட்யூப்க்குள் விரைவாக அனுப்புவது தான் ஹைப்பர் லூப் திட்டமாகும். இதற்காக தி போரிங் கம்பெனி என்ற தனி நிறுவனத்தை எலன் மஸ்க் நிறுவியுள்ளார்.

New York - Washington in 29 minutes by Hyperloop

இந்தியாவிலும் ஹைப்பர் லூப் திட்டம் பற்றி ஆலோசனைகள் நடந்து வருகிறது. தி போரிங் கம்பெனி நிர்வாகிகள் மத்திய மாநில அரசுகளுடன் கலந்து பேசி வருகிறார்கள். மும்பை - பெங்களூர்- சென்னை - கொல்கத்தா வழித்தடம் உட்பட ஆராயப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+