லாட்ஜில் தங்க வந்த பெண்களை போதை மருந்து கொடுத்து பலாத்காரம்- உரிமையாளர் கைது!
Subscribe to Oneindia Tamil
வெலிங்டன்: நியூசிலாந்தில் லாட்ஜ் ஒன்றில் தங்க வந்தப் பெண்களை அந்த லாட்ஜ் உரிமையாளரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஐடியம் என்ற இடத்தில் மைக்கேல் ஹாரிஸ் என்பவர் லாட்ஜ் நடத்தி வருகிறார். இவரது லாட்ஜில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் தங்குவது வழக்கம்.
அங்கு தனியாக தங்கும் வெளிநாட்டு பெண்களுக்கு உணவில் போதை மருந்து கொடுத்து அவர்களை மைக்கேல் ஹாரிஸ் பலாத்காரம் செய்து வந்தார்.
இவ்வாறு அவர் 16 பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் 18 வயதில் இருந்து 25 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்தது.
பெண்கள் மட்டும் அல்லாமல் அவர் ஆண்களுடனும் தவறான உறவு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து மைக்கேல் ஹாரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications