For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By Siva
Google Oneindia Tamil News

New Zealand: Earthquake Hits Kermadec Islands
வெல்லிங்டன்: நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூசிலாந்தின் வடகிழக்கு பதியில் அமைந்துள்ளது கெர்மடெக் தீவுகள். இங்கு இன்று காலை 5.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம் 34 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஆனால் இது போன்ற நிலநடுக்கங்களால் மையப் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டருக்குள் உள்ள கடலோர பகுதிகளில் சிலநேரம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி ஏற்படலாம் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

English summary
A 6.7 magnitude quake hit Kermadec islands which is situated on the northeast of New Zealand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X