அமெரிக்கா இருக்கட்டும்.. விசா ரூல்ஸை மாற்றிய நியூசிலாந்து.. இந்தியர்களுக்கு லக்.! ஆஹா நோட் பண்ணுங்க
வெலிங்டன்: அமெரிக்கா ஒரு பக்கம் வெளிநாட்டினர் தனது நாட்டிற்குள் வரத் தொடர்ச்சியாகப் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் அதிருப்தியில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க.. இதற்கு நேர்மாறாக நியூசிலாந்து தனது நாட்டிற்கு வெளிநாட்டவரை வரவழைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாக வெளிநாட்டவர் அமெரிக்காவுக்கு வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே இது தொடர்பான நிர்வாக உத்தரவுகளை அவர் பிறப்பித்து இருந்தார். வரும் காலங்களில் மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தீவிரம் காட்டுவார் என்றே தெரிகிறது.
தளர்த்தும் நியூசிலாந்து:
அமெரிக்கா இப்படி கெடுபிடிகளை விதித்து வரும் சூழலில் மற்றொருபுறம் நியூசிலாந்து விசா தொடர்பான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தளர்த்தி வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாக இப்போது மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலை செய்வோர் நியூசிலாந்துக்கு எளிதாக விசா பெறும் வகையில் விதிகளைத் தளர்த்தியுள்ளது.
அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே, அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு ஒர்க் ஃபர்ம் ஹோம் முறை அதிகரித்து வருகிறது. இதுபோல ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலை செய்வோர் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்பதால் அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வேலை செய்கிறார்கள். சிலர் நாடு விட்டு நாடு போய் கூட வேலை செய்கிறார்கள்.
டிஜிட்டல் நாடோடிகள்:
உதாரணத்திற்கு அமெரிக்கா அல்லது பிரிட்டன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒர்க் ஃபர்ம் ஹோம் என்பதால் நியூசிலாந்தில் இருந்தோ அல்லது இந்தோனேசியாவில் இருந்தோ வேலை செய்யலாம். இவர்களை "டிஜிட்டல் நாடோடிகள்" (digital nomad) என்று அழைப்பார்கள். இவர்களுக்கான விதி நெறிமுறைகளைத் தான் தளர்த்தப் போவதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
புதிய விசா விதிமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் வரை தங்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இவர்கள் நியூசிலாந்தில் இருந்தபடி 90 நாட்கள் வரை வேலை செய்யலாம். 90 நாட்களுக்கு மேலும் கூட இவர்கள் விருப்பப்பட்டால் இருக்கலாம். ஆனால், அதன் பிறகு சுற்றுலாப் பயணிகள் வரியை (resident tax) செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சொல்வது என்ன:
இது தொடர்பாக நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் கூறுகையில், "விதிகளில் நாங்கள் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். இது நியூசிலாந்திற்கு வரும் மக்கள் அதிக நேரம் தங்குவதை உறுதி செய்யும். அவர்கள் இங்கு அதிக நாட்கள் இருக்கும் போது, இங்கேயே அதிகம் செலவு செய்வார்கள். இது நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும்" என்றார்.
நியூசிலாந்து பொருளாதாரம்:
ஓசியானியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான நியூசிலாந்து பெரும்பாலும் சுற்றுலாவையே நம்பி இருக்கும் ஒரு நாடாகும். கொரோனாவுக்கு முன்பு வரை அங்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் சுற்றுலாத் துறை மொத்தமாக முடங்கியது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து நியூசிலாந்தால் இன்னும் மீள முடியவில்லை. பொருளாதார மந்தநிலையிலும் அங்கு ஏற்பட்டது.
நியூசிலாந்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவே இப்போது அந்நாட்டு அரசு சுற்றுலாத் துறைக்குச் சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது, நாட்டின் ஜிடிபியை உயர்த்தலாம் என்று அந்நாட்டு அரசு எண்ணுகிறது. இதனால் நீண்ட கால விசாவில் வருவோருக்கான கட்டுப்பாடுகளையும் கூட நியூசிலாந்து சமீபத்தில் தளர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டை சேர்ந்த அனைவரும் எளிதாக நியூசிலாந்திற்கு சென்று தங்கி வேலை செய்யலாம்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications