இப்போது சாப்பிடுங்க.. உயிர் போன பிறகு பில் கட்டுங்க போதும்.. பிரபல பீட்சா நிறுவனத்தின் வினோத திட்டம்
ஆக்லாந்து: காலம் முழுக்க உணவைச் சாப்பிடலாம்.. ஆனால், அதற்கு உயிரிழந்த பிறகு கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்றால் எப்படி இருக்கும்! இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால், அப்படி இல்லை.. பிரபல பீட்சா நிறுவனம் ஒன்று உயிரிழந்த பிறகு கட்டணம் செலுத்தும் ஒரு வினோத முறையைக் கொண்டு வந்திருந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தக் காலத்தில் பை நவ், பே லேட்டர் திட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் இதைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையே நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டது.

உயிரிழந்த பிறகு
நியூசிலாந்தின் புகழ்பெற்ற ஹெல் பீட்சா என்ற நிறுவனம், வாடிக்கையாளர்கள் இப்போது பீட்சாவை ஆர்டர் செய்து சாப்பிடலாம்.. ஆனால், அதற்கான கட்டணத்தை அவர்கள் இறந்த பிறகு செலுத்தலாம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இதை அவர்கள் "ஆஃப்டர்லைஃப் பே" என்று அழைக்கிறார்கள். .
கடந்த 2023ல் அந்த நிறுவனம் இப்படியொரு வினோதத் திட்டத்தைக் கொண்டு வந்தது. எல்லாரும் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால் அந்நிறுவனத்திற்கு வருமானமே வராது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. இத்திட்டம் 666 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.. அந்த 666 பேரும் உயிருடன் இருக்கும் வரை எவ்வளவு பீட்சாவை வேண்டும் என்றாலும் இந்த நிறுவனத்தில் வாங்கி சாப்பிடலாம்.. அதற்கு ஒரு பைசா கூட கட்ட தேவையில்லை.
எப்படி செயல்படும்
உயிரிழந்த பிறகு அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் போதும். உயிரிழந்த பிறகு எப்படிச் செலுத்த முடியும் என்றால் டவுட் வரும். இதற்காகப் பிரத்தியேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாம்.. தங்களது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்துவதற்குச் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் ஒரு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும். அதாவது உயிரிழந்த பிறகு பில்லை தனது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.. அப்படி வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் குடும்பத்தினர் தர வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தத் திட்டம் வினோதமாகத் தோன்றலாம்.. அல்லது இதில் எதாவது கூடுதல் கட்டணங்கள் அல்லது அபராதங்கள் இருக்கும் என பலரும் நினைத்தனர். இருப்பினும், அதுபோல எதுவும் இல்லை என்று ஹெல் பீட்சா சிஇஓ பென் கம்மிங் கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "இப்போது எங்குப் பார்த்தாலும் பை நவ், பே லேட்டர் திட்டம் தான் இருக்கிறது. அதை நாங்கள் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல முயன்றோம்.
எதற்கு இப்படியொரு திட்டம்
இது ஒரு விளம்பர யுக்தி தான். அதேநேரம் இதில் மறைமுகக் கட்டணம் எதுவும் இல்லை. 666 பேருக்கு இதை நாங்கள் வழங்கியுள்ளோம். அவர்கள் உயிரிழந்த பிறகே அதற்கான கட்டணத்தைச் செலுத்துவார்கள். இந்த பை நவ் பே லேட்டர் திட்டம் நியூசிலாந்து மக்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதைக் காட்டவே இப்படியொரு விளம்பரத்தை வடிவமைத்தோம். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குக் கூட மக்கள் பே லேட்டரை பயன்படுத்துவது கவலை தருகிறது" என்றார்.
666 பேருக்கு மட்டுமே
18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து 666 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நியூசிலாந்தில் இருந்து 666 பேருக்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து 666 பேருக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நியூசிலாந்தின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் திட்டம் குறித்து அப்போதே எச்சரித்தனர். இது அடிமையாக்கும் தன்மை கொண்டது என்றும் கடன் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். இலவச பீட்சாவுக்கு ஆசைப்பட்டு இந்த வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications