கண்ணுல அந்த வெறி.. நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிர வைத்த ஹானா! உலகம் முழுக்க ஃபேமஸ் ஆயிட்டாங்க!
வெலிங்டன்: நியூசிலாந்தில் மவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இனத்தைச் சேர்ந்த எம்பியான ஹானா ரவ்ஹிடி ஆக்ரோஷமாக பழங்குடியின பாடலை பாடியதோடு சட்ட திருத்த மசோதாவை கிழித்து எறிந்தார். தற்போது இந்த வீடியோ உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் மவோரி பழங்குடியின மக்களின் நியூசிலாந்து டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில் 21 வயதான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 250 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் நியூசிலாந்தின் மிக இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றவர் தான் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்.
முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது தனது பேச்சின் இடையில் தங்கள் இனத்தின் போர் பாடலை ஆக்ரோஷமாக பாடி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். நியூசிலாந்து நாட்டில் மவோரி பழங்குடியின மக்களுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையே 1840 இல் பாரம்பரிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வைதாங்கி ஒப்பந்தம் என அழைக்கப்படும் அது பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும் மவோரி பழங்குடியின தலைவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவோரி பழங்குடி மக்களுக்கு சலுகைகள் உரிமைகள் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
New Zealand Haka Protest: NZ's Youngest MP Hana-Rawhiti Maipi-Clarke Performs Traditional Maori Dance, Tears Copy of Treaty Principles Bill As She Leads Stir in Parliament (Watch Video)https://t.co/Gq0wDYuFvk#NewZealand #HanaRawhiti #Haka #protest #Parliament #maoridance pic.twitter.com/yF4FlZSPJQ
— Prof Dr Shibu A (@shibu_prof) November 15, 2024
இதற்கு டி பாடி மாவோரி கட்சி எம்பியான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான விவாதத்தின் போது இளம் எம்பி என ஹானா ரவ்ஹிடி தங்களது போர் பாடலை ஆக்ரோசத்துடன் பாடி மசோதா நகலை கிழித்து எறிந்தார். தொடர்ந்து அவருடன் மற்ற எம்பிக்களும் சேர்ந்து கொண்டு தங்களது போர் பாடலை பாடினர்.
அவர்களது பாடலும் ஆக்ரோஷம் நிறைந்த முகமும் அந்த நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த நாடாளுமன்ற சபாநாயகர் அவர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்றினார். இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உலகம் முழுவதும் கொடுக்க ஆரம்பித்துவிட்டது இனி அரசுகள் அதிரும் என அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications