அதிகாரத்துக்கு எதிரான குரல்.. ஆக்ரோஷ நடனம்! நாடாளுமன்றத்தை தெறிக்க விட்ட பெண் எம்பி! பாயும் நடவடிகை!
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பதவியேற்ற உடன் ஹாக்கா நடனமாடி உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண் எம்பியான ஹானா ரவ்ஹிடி மைபி கிளார்க் உள்ளிட்ட 3 எம்பிகள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவோரி பழங்குடி இனம் தொடர்பான பழமையான ஒப்பந்தத்தை மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்த போது மற்ற எம்பிக்களை, அவர்கள் அச்சுறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.
நியூசிலாந்து நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் மவோரி பழங்குடியின மக்களின் நியூசிலாந்து டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 21 வயதான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்கும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 250 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் நியூசிலாந்தின் மிக இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றவர் தான் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க்.

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது தனது பேச்சின் இடையில் தங்கள் இனத்தின் போர் பாடலை ஆக்ரோஷமாக பாடி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹானா ரவ்ஹிடி மீண்டும் ஹாக்கா நடனமாடி மீண்டும் கவனத்தை பெற்றார். அதாவது நியூசிலாந்து நாட்டில் மவோரி பழங்குடியின மக்களுக்கும், பிரிட்டன் அரசுக்கும் இடையே 1840இல் பாரம்பரிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வைதாங்கி ஒப்பந்தம் என அழைக்கப்படும் அது பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும் மவோரி பழங்குடியின தலைவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவோரி பழங்குடி மக்களுக்கு சலுகைகள் உரிமைகள் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு டி பாடி மாவோரி கட்சி எம்பியான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
New Zealand Haka Protest: NZ's Youngest MP Hana-Rawhiti Maipi-Clarke Performs Traditional Maori Dance, Tears Copy of Treaty Principles Bill As She Leads Stir in Parliament (Watch Video)https://t.co/Gq0wDYuFvk#NewZealand #HanaRawhiti #Haka #protest #Parliament #maoridance pic.twitter.com/yF4FlZSPJQ
— Prof Dr Shibu A (@shibu_prof) November 15, 2024
இது தொடர்பான விவாதத்தின் போது இளம் எம்பி என ஹானா ரவ்ஹிடி தங்களது போர் பாடலை ஆக்ரோசத்துடன் பாடி மசோதா நகலை கிழித்து எறிந்தார். தொடர்ந்து அவருடன் மற்ற எம்பிக்களும் சேர்ந்து கொண்டு தங்களது போர் பாடலை பாடினர். அவர்களது பாடலும் ஆக்ரோஷம் நிறைந்த முகமும் அந்த நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த நாடாளுமன்ற சபாநாயகர் அவர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்றினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நியூசிலாந்து அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது தொடர்ந்து இந்த ஆணையம் நாடாளுமன்றத்தில் மாவோரி பழங்குடியின கட்சி எம்பிக்கள் மற்றும் பிற எம்பிக்களிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் மாவோரி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்பிக்களை 21 நாட்களுக்கும், ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்கை ஏழு நாட்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பெரிதாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications