Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் குழந்தைக்கு தாயான பிறகு டிவி தொகுப்பாளரான காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் பிரதமர்

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: பெண் குழந்தைக்கு தாயான நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு அவரது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா. அந்நாட்டின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இவர் ஆக்லாந்தின் ஆல்பர்ட் மவுண்ட் தொகுதியின் பெண் எம்.பியாக இருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து ஜெசிந்தா அக்கட்சியின் தலைவராக பதவியேற்றார்.

பிரதமரான ஜெசிந்தா

பிரதமரான ஜெசிந்தா

பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. ஜெசிந்தா பிரதமராக பதவி ஏற்றார்.

தொகுப்பாளருடன் காதல்

தொகுப்பாளருடன் காதல்

ஜெசிந்தா நாட்டின் பிரதமர் ஆவதற்கு முன்பு, தனியார் தொலைக் காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டை காதலித்து வந்தார். 2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினை தொடர்பாக ஜெசிந்தாவை, கிளார்க் கேபோர்டு சந்தித்தார்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்த சந்திப்பை தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

பெனாசிர் பூட்டோ

பெனாசிர் பூட்டோ

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தை கவனிப்பு

குழந்தை கவனிப்பு

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்தது

நிச்சயதார்த்தம் முடிந்தது

இந்த நிலையில், பிரதமர் ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

திருமண தேதி

திருமண தேதி

ஈஸ்டர் விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரின் திருமண தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+