நாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி
வெலிங்டன்: நியூசிலாந்தில் நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபட்ட போது எம்பியின் குழந்தைக்கு அந்நாடடு சபாநாயகர் பாலூட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் டமாடி கபி என்பவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பி ஆவார். ஓரினச் சேர்க்கையாளரான இவர் ஸ்மின் என்ற ஆண் நண்பரை திருமணம் செய்தார்.

இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பேறு கால சிகிச்சை விடுமுறைக்கு பின் நாடாளுமன்றத்துக்கு டமாடி கபி எம்பி தனது குழந்தையை தூக்கி வந்தார்.
நேற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் டமாடி கபி தனது குழந்தையை தூக்கிக்கொண்டு விவாதத்தில் கையை நீட்டி நீட்டி ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்த சபாநாயகர் டர்வர் மல்லார்டு அவரிடம் இருந்து குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்து குழந்தைக்கு பாட்டிலில் இருந்து புட்டி பாலை ஊட்டினார். குழந்தைக்கு சபாநாயகர் பாலூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications