உருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர்.
இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது.
பிடிஎஸ் 70பி என்று பெயரிடப்பட்டுள்ள இது வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்குமென்றும், மேலும் அது மேகமூட்டமாக வளிமண்டலத்தை கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
- விண்ணிலிருந்து பார்த்தால் இந்தியாவின் காற்று வித்தியாசமாக தெரிவது ஏன்?
- மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு
யுரேனஸ் சூரியனை சுற்றிவரும் தூரத்தை போன்று இந்த கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருமென்று ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட் பார் அஸ்ட்ரானமியின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
இது, குள்ள நட்சத்திரத்தை ஒவ்வொரு முறை சுற்றி வருவதற்கும் 118 வருடங்களாகிறது.
நமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களைவிட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1,000 செல்ஸியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.
கொரோனாகிராஃப் என்ற கருவியை பயன்படுத்தி மங்கலாக காணப்படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- 99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்
- எதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்
கோள்கள் எப்படி உருவாகின்றன?
ஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலும் வாயு மற்றும் தூசுக்களை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும்.
காலப்போக்கில், அந்த சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும்.
அவை எந்தளவிற்கு அளவில் விரிவடைகிறதோ, அந்தளவிற்கு புவி ஈர்ப்பு விசையை கொண்டிருக்கும். மேலும், உருவாக்க நிலையிலுள்ள மற்ற கோள்களிடமிருந்து கூடுதல் சிதைவுகளை கவரும்.
அவ்வாறு உருவாகும் அமைப்பு, தனது பாதையை தெளிவாக அமைத்துக்கொள்ளுமானால், புதிய கிரகமாக உருவெடுக்கிறது.
நமது சூரிய குடும்பத்தை அடிப்படையாக கொண்டே இதற்கான கோட்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கவுள்ளனர். பிடிஎஸ் 70பி போன்ற கோள்களை அதன் தொடக்ககாலம் முதலே கவனித்து வந்தால் இதுகுறித்த பல்வேறு செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு வானியலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியே வர மேலும் 4 மாதம் ஆகும்
- விம்பிள்டன் 2018 : நீங்கள் ஏன் கண்டிப்பாக பார்க்கவேண்டும்? - 5 காரணங்கள்
- பாதிரியாரின் பாலியல் குற்றம் மூடிமறைப்பு: ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை
- ஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications