புதிய நட்சத்திரத்துக்கு ரொனால்டோவின் நிக்நேம் சூட்டிய விஞ்ஞானிகள்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வாஷிங்டன்: சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திரம் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரை தாங்கி அழைக்கப்படுவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சோப்ரல் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நட்சத்திரம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது பரப்பில் மிக பெரிதாகவும் காட்சியளிக்கிறது.

இந்த நட்சத்திரத்துக்கு விஞ்ஞானிகள் சிஆர்7 என்று பெயர் வைத்தனர். புதிய நட்சத்திர கண்டுபிடிப்புக்காக சந்தோஷப்பட்டதைவிட அதற்கு வைக்கப்பட்டுள்ள பெயருக்காகவே அதிகம் பேர் மகிழ்ச்சியடைந்துள்ளராம். காரணம், அது கால்பந்து பிரபலம் ரொனால்டோவின் செல்ல பெயர்.
போர்ச்சுக்கல் நாட்டுக்காரரான கால்பந்தாட்ட பிரபலம் ரொனால்டோ, ரியல் மேட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். அவர், மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஆடத் தொடங்கிய காலம் முதல் சிஆர்7 என அழைக்கப்படுகிறார். சிஆர் என்பது ரொனால்டோவின் இன்ஷியலாகும். 7 என்பது அவரது ஜெர்சியிலுள்ள நம்பர். இதைத்தான் சிஆர்7 என்பர் ரசிகர்கள்.
புதிய நட்சத்திரத்துக்கு சிஆர்7 என்று பெயர் வைக்க ரொனால்டோவும் ஒரு இன்ஸ்பிரேசனாக இருந்தார் என்று விஞ்ஞானிகள் குழுவில் ஒருவர் பேட்டியளித்தாலும் அளித்தால், ரொனால்டோ ரசிகர்கள் உற்சாகத்தில் விண்வெளியிலேயே மிதக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications