சீட்டுக்கட்டை போல சரிந்த.. புதிய பாலம்! சீன புராடெக்ட் இப்படித்தான் இருக்கும் போல

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளில், பாலத்தின் ஒரு பகுதி பெரும் புகையுடன் மலையருகே சரிந்து விழுவது பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஎர்காங் நகர போலீசார், பாலத்திற்கு அருகிலுள்ள கடைகளிலும் சாலைகளிலும் விரிசல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இந்த பாலம் 758 மீட்டர் நீளமுள்ளது. பாலம் முழுவதும் சரியாமல் குறிப்பிட்ட சிறிய பகுதி மட்டுமே இடிந்து விழுந்திருக்கிறது.

China bridge

பாலம் இடிந்ததால், மலையின் நிலப்பகுதியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பகுதியில் கனமழை தொடர்வதால் மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுதான் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தைக் கட்டிய சிச்சுவான் சாலை மற்றும் பாலக் குழுமத்தின் சமூக ஊடகப் பதிவுகளின்படி, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நிறைவடைந்துவிட்டதாக தெரிய வருகிறது.

சீனாவின் மையப்பகுதியை திபெத்துடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சீன ஊடகங்களின் தகவலின்படி, பாலம் இடிந்தபோது ஒரு டிரக் மட்டும் அதன் மீது இருந்தது. அந்த டிரக்கின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+