'எனது நண்பர் மோடி வருகிறார்'... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி
அடுத்த வாரம் எனது நண்பர் இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் வருகிறார் என்று அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி, எனது நண்பர் இஸ்ரேலில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்றும் அது இந்திய இஸ்ரேல் உறவுகளை மேம்படுத்தும் என்றும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா திரும்பும் வழியில் நெதர்லாந்து செல்ல உள்ளார். ஏற்கெனவே, அவர் போர்ச்சுகல் சென்றுவிட்டுத்தான் அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் அவர் இஸ்ரேல் செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,''எனது நண்பரும், இந்தியப் பிரதமருமான மோடி ஜூலை 4ம் தேதி இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்முறையாக, இஸ்ரேல் வரும் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். கடந்த 70 ஆண்டுகளில், இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர் யாரும் வரவில்லை. மோடிதான் 3 நாள் பயணமாக வருகிறார். அவரது பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உலக அளவில் பெரும் மக்கள்தொகையுடன், வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. அந்நாட்டுடன் பல்வேறு துறைகளில் இணக்கமாகச் செயல்பட இஸ்ரேல் ஆர்வமாக உள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பயணத்தின்போது, விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிரதமர் மோடி நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications