எமர்ஜென்சி அமலில் இருக்கும்போதே தீவிரவாத தாக்குதல்.. பரிதாப நிலையில் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: நாட்டில் எமர்ஜென்சி நிலை அமலில் இருக்கும்போதே தீவிரவாதிகளால் எளிதாக தாக்குதல் நடத்தி பல பொதுமக்களை படுகொலை செய்ய முடிகிறது என்றால் அந்த நாடு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படியொரு மோசமான நிலையில்தான் தற்போது, உலக நாகரீகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படும் பிரான்ஸ் நாடு உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி தலைநகர் பாரீசில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 130 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிறகு பிரான்சில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே, கையில் அனைத்து அதிகாரமும் குவிந்திருந்தது. முழு உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் வைக்கப்பட்டிருந்தனர்.

இருமுறை நீட்டிப்பு

இருமுறை நீட்டிப்பு

சமீபத்தில் நிறைவடைந்த யூரோ கால்பந்தாட்ட தொடர் மற்றும் சைக்கிள் பந்தையங்களுக்காக, அவசர நிலையை இரு முறை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார் பிரான்ஸ் அதிபர்.

நீடிக்கப்போவதில்லை என்றார்

நீடிக்கப்போவதில்லை என்றார்

தற்போதைய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னாள் அதிபர் அளித்த பேட்டியொன்றில், வரும் 26ம் தேதியோடு எமெர்ஜென்சி நிறைவடைகிறது. இனிமேல் அதை நீடிக்க போவதில்லை என கூறியிருந்தார்.

எமர்ஜென்சியின்போதே

எமர்ஜென்சியின்போதே

ஆனால், எமர்ஜென்சி அமலில் இருக்கும்போதே, தீவிரவாதிகளின் தாக்குதலை பாரீஸ் இன்று சந்தித்துள்ளது. இதையடுத்து எமர்ஜென்சி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அமலில் இருக்கும்போதே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்த முடிகிறது எனில், பாரிஸ் நிலைமை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

யார் காரணம்

யார் காரணம்

ஐஎஸ்ஐஎஸ் இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது. துக்கத்தின் காரணமாக, ஈபிள் டவர் தொடர்ந்து இருளடைந்தே கிடக்க வேண்டும் என்று அந்த தீவிரவாத இயக்கம் ஆசை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பு என்பதை பிரான்ஸ் இதுவரை கூறவில்லை. லாரியில் வெடிகுண்டு நிரப்பப்பட்டு தாக்குதல் நடந்துள்ளதால் அந்த நாட்டிற்குள் இருக்கும் சிலரின் ஆதரவு இல்லாமல் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என பிரான்ஸ் எண்ணுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+