பெற்ற மகனின் வாய்க்கு பூட்டு போட்டு கொன்ற கொடுமைக்கார தந்தை- நைஜீரியா விபரீதம்
நைஜீரியா: நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ். இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "எலிவிஸ் அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு அடைத்து உள்ளார்" என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications