ரூ.379 போதும்.. ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டுக் கொண்டே விமானத்தில் பயணிக்கலாம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ள விமான வடிவிலான உணவகம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அபுஜா: நைஜீரியா நாட்டில் தொடங்கப்பட்டுள்ள விமான வடிவிலான உணவகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விமானப் பயணம் என்பது இன்றளவும் பலருக்கு கனவாகவே இருந்து வருகிறது. அடிக்கடி விமானப் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் கூட மீண்டும் விமானத்தில் பயணிக்க மாட்டோமா என ஏங்க வைத்து விட்டது இந்த கொரோனா ஊரடங்கு.
இவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் நைஜீரியாவில் விமான வடிவிலான உணவகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. நைஜீரிய தலைநகர் அபுஜாவில் தொடங்கப்பட்டுள்ள அந்த உணவகத்தை அச்சுஅசலாக விமானம் போலவே வடிவமைத்துள்ளனர். இதற்காக ரூ.20 லட்சம் வரை செலவழித்திருக்கிறார் அதன் உரிமையாளர்.

அமோக ஆதரவு
"இவ்வளவு பெரிய தொகையை செலவிடுகிறோமே, ஓட்டலுக்கு கூட்டம் வருமா?" என்ற சந்தேகம் அதன் உரிமையாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. ஆனால் உணவகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் 100க்கும் அதிகமானோர் வருகை தருகின்றனராம். இதனால் அதன் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

செல்பிக்காக...
உணவகத்துக்கு வரும் பெரும்பாலோனார் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, ஆனால் கட்டாயம் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். "இங்கு செல்பி எடுக்கும் போது ஏதோ தனி விமானத்தில் பயணிப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அதனாலேயே நான் இங்கு அடிக்கடி வருகிறேன். நிஜ விமானத்தில் போக முடியவில்லை என்றாலும், அந்த உணர்வு இங்கு ஏற்படுகிறது", என்கிறார் 20 வயதேயான வாடிக்கையாளர் ஒருவர்.

ஆரம்ப விலை
இந்த உணவகத்தில் உள்ள உணவு வகைகளின் ஆரம்ப விலை 2000 நைரா. அதாவது இந்திய மதிப்புபடி ரூ.379. எனவே இந்த ஓட்டலுக்கு சென்றால், வெறும் ரூ.379ல் விமானத்தில் பயணித்த உணர்வை பெற்றுவிடலாம். அதேசமயம் கொரோனா தொற்றில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் ஓட்டலில் செய்யப்பட்டுள்ளன.

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்
இந்த கொரோனா காலத்தில் ஓட்டலுக்கு போவது என்பதே பெரிய காரியமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் விமானத்தில் பயணிக்கும் உணர்வோடு ஜாலியாக சாப்பிடுவது என்றால் மிஸ் செய்ய மனசு வருமா என்ன? அதனாலேயே இங்கு கூட்டம் அலைமோதுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications