For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித மாமிசம் விற்ற ஹைஜீரிய ஹோட்டலுக்கு மூடுவிழா: ரத்தம் சொட்ட சொட்ட மனித தலைகள் பறிமுதல்

By Siva
Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் மனித மாமிசத்தை சமைத்து விற்பனை செய்து வந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள அனம்பரா மகாணாத்தில் இருக்கும் உணவகம் ஒன்றில் மனித மாமிசத்தை சமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த உணவகத்தில் ஏதோ சந்தேகத்திற்கு இடமான செயல் நடப்பதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த உணவகத்திற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது மனித மாமிசம், பிளாஸ்டிக் பைகளில் ரத்தம் சொட்ட இருந்த மனித தலைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பல லட்சம் நைஜீரிய மக்கள் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் நான்கு நாள் சம்பளமான ரூ. 217 மனித மாமிசத்திற்கான விலையாக அந்த உணவகம் பெற்றுள்ளது. உள்ளூர் போதகர் ஒருவர் அந்த உணவகத்திற்கு சென்று சாப்பிட்டபோது அவர் சாப்பிட்ட சிறிய கறித்துண்டுக்கு ரூ.217 வாங்கியுள்ளனர். அந்த சிறிய துண்டு மனித மாமிசம் ஆகும்.

மனித மாமிசம் விற்பனை செய்த ஹோட்டலை இழுத்து மூடிய போலீசார் இது தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர்.

English summary
Police have closed a Nigerian restaurant that served human flesh. Police arrested 10 persons in connection with this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X