Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியோ கார்னிவல்.. இயற்கை மார்பழகுடன் கூடிய 20 அழகிகள் தேவை.. காத்திருக்கும் சம்பா பள்ளி!

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனீரோ: பிரேசிலின் மிகப் புகழ் பெற்ற ரியோ டி ஜெனீரோ கார்னில் விழா வர இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ரியோவைச் சேர்ந்த ஒரு சம்பா நடனப் பள்ளி சம்பா நடனப் பெண்களுக்குப் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

அதாவது சிலிக்கான் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களுடன் கூடிய பெண்கள் சம்பா நடனத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே அந்தக் கட்டுப்பாடு.

தனது பள்ளி சார்பில் 20 அழகிய பெண்களைத் தேர்வு செய்து சம்பா நடனத்தை ஆட ஏற்பாடு செய்யவுள்ளது. அதற்காக வரும் பெண்கள் செயற்கை மார்பகங்களுடன் கூடியவர்களாக இருக்கக் கூடாது என்று அது கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கையான மார்புகளுடன் வருக வருக...

இயற்கையான மார்புகளுடன் வருக வருக...

இதுகுறித்து அந்தப் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், எங்களது பள்ளி சார்பில் 20 நடனக்கலைஞர்களைத் தேர்வு செய்து கார்னிவலில் பங்கேற்கவுள்ளோம். இந்த 20 பெண்களும் இயற்கையான மார்பழகுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

சிலிக்கான் மார்புகள் வேண்டாம்

சிலிக்கான் மார்புகள் வேண்டாம்

சிலிக்கான் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களுடன் கூடிய பெண்கள் எங்களுக்கு வேண்டாம். அது கவர்ச்சியைத்தான் காட்டுமே தவிர, கலையைக் காட்டாது.

ப்ரீயா டிரஸ் தருவோம்

ப்ரீயா டிரஸ் தருவோம்

இயற்கையான மார்பழகுடன் கூடிய பெண்கள் நடனம் ஆட முன்வந்தால் அவர்களுக்குப் பிரதியுபகாரமாக இலவசமாக நடன உடைகளை நாங்களே வழங்குவோம்.

இயற்கை அழகே அம்சமானது...

இயற்கை அழகே அம்சமானது...

மார்பகங்கள் இயற்கையாக இருக்க வேண்டும். எங்களுக்கு அளவு முக்கியமல்ல. எப்படிப்பட்டதாக இருந்தாலும் இயற்கைதான் அழகு. அப்படிப்பட்ட 20 பெண்கள்தான் எங்களுக்குத் தேவை என்றனர்.

செயற்கை மோகம்

செயற்கை மோகம்

பிரேசில் நாட்டில் சம்பா நடனம் மிகப் புகழ் பெற்றது. உலக அளவில் அனைவரையும் கவர்ந்த நடனமும் கூட. ஆனால் பல பெண்கள் தற்போது தங்கள் மீது அனைவரின் கண்களும் பட வேண்டும் என்பதற்காக மார்பகங்களை பெரிதாக்கி, கவர்ச்சியைக் கூட்டி நடனத்தை விட அவர்களை ரசிக்க வைக்கும் வகையில் ஆடுவது அதிகரித்து வருகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரியில் நம்பர் 2

பிளாஸ்டிக் சர்ஜரியில் நம்பர் 2

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பழகைப் பெருக்கும் பெண்கள் பிரேசில் நாட்டில்தான் அதிகம் உள்ளனராம்.

ஆண்டுக்கு 8 லட்சம் செயற்கை அழகு...

ஆண்டுக்கு 8 லட்சம் செயற்கை அழகு...

பிரேசிலில் ஆண்டுக்கு 8 லட்சம் செயற்கை மார்பக அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறதாம்.

லிப்போசக்ஷன்தான் அதிகம்

லிப்போசக்ஷன்தான் அதிகம்

இதில் லிப்போ சக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் அறுவைச் சிகிச்சை செய்வோர்தான் அதிகமாம். அடுத்து செயற்கை மார்பக அறுவைச் சிகிச்சை, பின்னழகை எடுப்பாக்குவது, தொப்பையைக் குறைப்பது ஆகியவற்றுக்கு மோகம் அதிகமாக இருக்கிறதாம்.

பிளாஸ்டிக் அழகிகள்...

பிளாஸ்டிக் அழகிகள்...

ரியோ கார்னிவலில் சம்பா நடனமாடும் பெண்களில் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்களாகவே இருக்கிறார்களாம்.

70,000 பேர் கூடுவர்

70,000 பேர் கூடுவர்

ரியோவில் நடைபெறும் கார்னிவலின்போது பேரணிகள் தவிர, சம்பாட்ரோம் எனப்படும் அரங்கில் நடைபெறும் சம்பான நடனப் போட்டிதான் அனைவரையும் கவர்ந்ததாகும். இதைக் காண 70,000 பேர் வரை கூடுவார்கள்.

பி்ப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை

பி்ப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை

2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி ரியோ கார்னிவல் நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+