விமானம் தேடும் பணி: இது தானா உங்கள் வேகம் - மலேசியா மீது கடுப்பில் சீனா
பெய்ஜிங்: மலேசிய விமானம் மாயமானதற்கும் சீன பயணிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேடுதல் பணி குறித்து மலேசியா மீது சீனா கடுப்பில் உள்ளதாம்.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தில் பயணித்த 239 பேரில் 154 பேர் சீனர்கள். இந்நிலையில் இது குறித்து மலேசியாவுக்கான சீன தூதர் ஹுவாங் ஹுய்காங் மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அனிபா அமானை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், மாயமான விமானத்தை சீன பகுதிகளில் தேடும் பணி துவங்கிவிட்டது என்று அனிபாவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் விமானம் மாயமானதில் சீன பயணிகளுக்கு தொடர்பு இல்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என்பதால் தேடுதல் பணியில் சீன அரசு தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தேடுதல் பணியில் மலேசிய அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து சீன அரசு கடுப்பில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications