சூழ்ந்தது வறுமை.. ராணுவ வீரர்கள் சாப்பிட கூட உணவு இல்லை.. கதறும் பாகிஸ்தான் - பரிதவிக்கும் மக்கள்
ஒரு நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கே உணவு வழங்க முடியாத நிலையில் பாகிஸ்தான் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உருவாகியுள்ள உணவுப் பஞ்சம் இப்போதுதான் தனது கோர முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்கியிருக்கிறது.
ஒருவேளை உணவுக்கே பாகிஸ்தான் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொடுக்க கூட உணவு இல்லாத அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு உணவு இல்லை என்பது அந்த நாடே விரைவில் நிர்மூலமாகிவிடும் என்பதற்கான முதல் சமிக்ஞை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விதியை மாற்றிய இயற்கை
கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளம், தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையில்லாமல் வாங்கிய கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் இன்றைக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியும், கஜானாவும் மொத்தமாக காலியானதால் சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கொலை பசியில் மக்கள்
நிதிப் பற்றாகுறையால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்போதைய சூழலில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் இரு வேளை உணவு உண்பதே கடினமானதாக மாறிவிட்டது. இதன் காரணமாக, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்க மக்கள் கடுமையாக சண்டையிட்டு கொள்கிறார்கள்.

சம்பளமும் இல்லை.. உணவும் இல்லை
உணவுப் பஞ்சத்தால் பாகிஸ்தானில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. உணவு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பாகிஸ்தான் அரசு, சர்வதேச நிதியம், உலக வங்கி, தனது நட்பு நாடுகள் ஆகியவற்றிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டு பெரிய அளவில் நிதி கொடுக்க யாரும் தயாராக இல்லை. இந்த சூழலில்தான், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்க கூட அந்நாட்டு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போயுள்ளது.

கிளர்ச்சி வெடிக்குமா?
பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு உணவு மட்டும்லலாமல் சம்பளத்தையும் இம்மாதம் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. இதனால் ராணுவ வீரர்கள் உச்சக்கட்ட விரத்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கே உணவு வழங்க முடியாத நிலையில் பாகிஸ்தான் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் மக்கள் பொறுமை இழந்து அரசுக்கு எதிராக போராட்டத்திலும், வன்முறையிலும் இறங்கிவிடுவார்கள் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications