வீட்டை விட்டு யாரும் வரகூடாது.. கொரோனா டெஸ்ட் எடுக்க போறவங்களுக்கு மட்டுமே அனுமதி! ஷாங்காயில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஷாங்காய் நகரில் கொரோனா பரிசோதனைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம், மற்ற எந்த தேவைக்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என நகர நிர்வாகம் கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் சீனாவில் கடுமையான பாதிப்பும் அதிக உயிரிழப்பும் நிகழ்ந்தது. பின்னர் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து 200- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.

இதனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சீனாவில் கொரோனா குறைந்த நிலையில் மற்ற நாடுகளை ஆட்டி படைத்தது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா 4ஆவது அலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் பொருளாதார மையமான ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நகரில் மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசிய பணிகள்

அவசிய பணிகள்

பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவசிய பணிகளை தவிர மற்ற எந்த பணிகளுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள மக்கள் கொரோனோ பரிசோதனைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம் என சீன அரசு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் அபாயம்

தொற்றுநோய் அபாயம்

மேலும் தொற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களின் நடைபாதைகள், திறந்த பகுதிகளில் நடக்கக் கூடாது என்வும் அங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் 20,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் ஷாங்காயின் லுஜியாசுய் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களிலேயே இரவு தங்கி வருகின்றனர்.

ஷாங்காய் நகரம்

ஷாங்காய் நகரம்

அதே நேரத்தில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்கள், சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் தொழில்களுக்கு வரி நிவாரணம், வாடகை நீட்டிப்பு , கடன் உதவி வழங்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துவருகிறது. ஷாங்காய் நகரம் அரசுக்கு வருமானத்தை ஈட்டி தரும் நகரமாகும். இந்த நகரத்தில் லாக்டவுன் பிறப்பித்துள்ளது சீன அரசுக்கு பொருளாதார நெருக்கடியை தரும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+