சிரியாவில் அமெரிக்கா- ரஷ்யாவின் தாக்குதல்கள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தம்- அதிபர் ஆசாத் மீது ஒபாமா
வாஷிங்டன்: பஷார் அல் ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை சிரியாவில் அமைதி இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்தனர்.

போர் நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுடன் வியாழக்கிழமை சிரியா குறித்து கலந்தாலோசித்தார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகும் வரை போராளிகள் தங்களின் போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
ஆசாத் பதவி விலகினால் மட்டுமே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை ஒன்று சேர்க்க முடியும். சிரியாவில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று ஆசாத் நினைத்தால் அவர் பதவி விலக வேண்டும்.
சிரியாவில் 5 ஆண்டுகளாக நடக்கும் பிரச்சனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் மூலம் இந்த பிரச்சனை தீருமா என்று பார்க்க வேண்டும். போர் நிறுத்தம் குறித்து பலரும் விமர்சிக்கலாம். ஆனால் சிரியாவில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் வரலாறு நம்மை கடுமையாக சாடும் என்றார்.
ஆசாத் பதவி விலக வேண்டும் என்று ஒபாமா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications