சுத்துப்பட்டு 93 கேலக்ஸிகளிலில் அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் இல்லை... நெதர்லாந்து ஆய்வு
ஆம்ஸ்டர்டாம்: நம்மைச் சுற்றியுள்ள 93 பால்வெளிகளில் நம்மை விட மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நெதர்லாந்து ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வேற்றுகிரகவாசிகள் குறித்த செய்திகள் முன்பை விட இப்போது அதிக அளவில் பேசப்படுகிறது. அவ்வப்போது பறக்கும் தட்டைப் பார்த்ததாக சிலர் கூறுவதுண்டு. வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாக கூட பலர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக சில வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கிறார்கள் என நாசாவின் படங்களை ஆராய்ச்சி செய்து சிலர் பரபரப்பைக் கிளப்புவதுண்டு.
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நமக்கு அருகில் உள்ள 93 பால்வெளி மண்டலங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்காக வாய்ப்பே இல்லை என ஒரு ஆய்வு அடித்துக் கூறுகிறது.

நெதர்லாந்து ஆய்வு...
நெதர்லாந்து நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரேடியோ ஆஸ்ட்ரோனோமியைச் சேர்ந்த ஒரு குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மிக நவீன தொழில்நுட்ப உதவியுடன் தொலைநோக்கி மூலம் இந்தக் குழு பூமிக்கு அருகில் உள்ள 93 பால்வெளி மண்டலங்களை ஆராய்ச்சி செய்துள்ளது.

93 பால்வெளி மண்டலங்களில்...
நாசாவின் இன்பிராரெட் ஆய்வு விண்கலத்தின் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து 1 லட்சம் பால்வெளி மண்டலங்களை ஆராய்ந்ததில் நம்மைச் சுற்றியுள்ள அருகில் உள்ள 93 மண்டலங்களில் எந்த வேற்றுகிரகவாசியும் இல்லை என்று இந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.

அதிநவீன வேற்றுகிரகவாசிகள்...
இந்தக் குழுவினர் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளையும் தங்களது ஆய்வுக்காக பயன்படுத்தினர். எங்காவது அதி நவீன வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்று இக்குழுவினர் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர்.

சான்சே இல்லை...
இதுகுறித்து நெதர்லாந்து குழுவின் தலைவரான மைக்கேல் காரெட் கூறுகையில், ‘எனக்குத் தெரிந்து நம்மைச் சுற்றிலும் உள்ள அறுகாமையில் உள்ள எந்த பால்வெளி மண்டலத்திலும் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக தெரியவில்லை' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications