Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவின் தந்திரம்.. இந்தியாவிற்கு எதிரான வரைபடத்தை அமலுக்கு கொண்டு வந்தது நேபாளம்.. அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: நேபாளத்தின் புதிய மேப் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா தற்போது அந்நாட்டு மேலவையிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. இதை எதிர்த்து நேபாளம் குரல் கொடுத்தது.

என்ன சண்டை

என்ன சண்டை

கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து இதனால் சண்டை நடந்து வருகிறது. இந்தியாவை எதிர்க்க முடிவு செய்த நேபாளம் இதற்காக மேப் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இந்த புதிய மேப் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா அங்கு நாடாளுமன்ற கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டது.

எத்தனை பெரி

எத்தனை பெரி

தற்போது அந்நாட்டு மேலவையிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மேலவையில் இந்த மசோதாவிற்கு 57 பேர் ஆதரவு அளித்தனர். இதனால் மசோதா ஒருமனதாக நிறவெறி சட்டம் ஆனது. இதனால் அந்த நாட்டில் புதிய மேப் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டு அதிபர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் .ஆனால் அதிபர் பிதாயா தேவி இந்த புதிய வரைபடத்திற்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு அளித்து வருகிறது.

இன்று வருகிறது

இன்று வருகிறது

அதனால் இன்றே அவர் வரைபடத்திற்கு ஆதரவு அளிப்பார். இதனால் இன்றே அந்த புதிய வரைபடம் அமலுக்கு வரும் என்கிறார்கள். இந்த வரைபடத்தில் லிபுலேக் உள்ளிட்ட மூன்று இந்திய இடங்களை தங்களுக்கு கீழ் இருக்கும் பகுதிகள் என்று கூறி நேபாளம் வரைபடம் வெளியிட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. வரலாற்று ரீதியாக இந்தியாவிற்கு கீழ் வரும் ஒரு இடத்தை அத்துமீறி தங்கள் வரைபடத்தில் நேபாளம் இணைத்துள்ளது.

நேபாளம்

நேபாளம்

இத்தனை வருடம் இந்தியாவில் இருந்து உதவிகளை பெற்றுவிட்டு தற்போது இந்தியாவிற்கே நேபாளம் முதுகில் குத்தி இருக்கிறது. நேபாளத்தின் பின் சீனா இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எப்படி வங்கதேசத்தை, பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக நேபாளம் இயக்குகிறதோ அதேபோல் நேபாளத்தையும் தற்போது சீனா தந்திரமாக இந்தியாவிற்கு எதிராக இயக்க தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+