Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025ம் ஆண்டு மருத்துவத்திற்கான.. நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: உலகில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசுகள் உள்ளன. இன்றைய தினம் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த ஆய்வுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் தலைசிறந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

nobel science

நோபல் பரிசு

அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த கண்டுபிடிப்பிற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆகும். ஷிமோன் சகாகுச்சி ஜப்பானைச் சேர்ந்தவராகும்.

எதற்காக நோபல் பரிசு?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சொந்த உடல் உறுப்புகளைத் தாக்கி அழிக்காமல் எப்படித் தடுக்கிறது என்பதை விளக்கும் முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக, மேரி இ. ப்ருன்கோ, ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறையின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

யார் இவர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. ப்ருன்கோ, 1961 இல் பிறந்தவர். இவர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றவர். தற்போது சியாட்டிலில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியில் பணியாற்றுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரெட் ராம்ஸ்டெல், 1960இல் பிறந்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையில் 1987இல் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சோனோமா பயோதெராபியூட்டிக்ஸின் அறிவியல் ஆலோசகராக உள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சாககுச்சி, 1951இல் பிறந்தவர். இவர் 1976இல் மருத்துவப் பட்டத்தையும், 1983இல் முனைவர் பட்டத்தையும் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்போது அவர் ஒசாகா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

ஆய்வு என்ன?

நாள்தோறும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு ஆயிரக்கணக்கான நோய்க்கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. பல நோய்க்கிருமிகள் மனித செல்களை போல் தோற்றம் அளித்து, நோய் எதிர்ப்புச் சக்தியில் இருந்து தப்ப முயலும். ஆனால், அதை கண்டறிந்து நோய் எதிர்ப்பு மண்டலம் அழித்துவிடும். எனவே, உண்மையான நோய் கிருமிகளையும் உடலின் சொந்தத் திசுக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது. இதை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் எப்படிச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தற்காகவே இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+