Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுராத்திரியில் கதவை தட்டிய பக்கத்துவிட்டு வில்சன்! நோபல் பரிசு வின்னருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்!

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட உள்ள செய்தியை நோபல் பரிசு கமிட்டியால் சொல்லவே முடியாத நிலையில், நள்ளிரவில் பால் மில்கிரோமின் வீட்டு கதவை, சக வெற்றியாளரும், பக்கத்து வீட்டு காரருமான ராபர்ட் வில்சன் தட்டி மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

Recommended Video

    நோபல் பரிசு வின்னருக்கு நடுராத்திரியில் கிடைத்த சர்ப்ரைஸ் - வீடியோ

    2020ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று நர்வே தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஆர் மில்கிரோம் (Paul R Milgrom), ராபர்ட் பி வில்சன் (Robert B Wilson) ஆகிய இருவருக்கும் 2020ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

     Nobel Prize: Robert Wilson to share the news to Paul Milgrom on middle of night

    "ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக" இருவருக்கும் இந்த பரிசு அறிவிக்கப்பட்டது.

    இந்த வெற்றி செய்தியைப் பகிர்ந்து கொள்ள நோபல் பரிசு கமிட்டியினர் பால் மில்கிரோமை அணுக முயன்றனர். ஆனால் முடியவில்லை, எனவே அவருடைய சக வெற்றியாளரும் அண்டை வீட்டாருமான ராபர்ட் வில்சன் நள்ளிரவில் அவரது வீட்டின் கதவைத் தட்டினார்.

    அதிகாலை 2:15 மணிக்கு ராபர்ட் வில்சன் பால் மில்கிரோமின் வீட்டு வாசலில் பெல் ஒலித்தது. ஸ்டாக்ஹோமில் இருக்கும் மில்கிரோமின் மனைவி வில்சன் மில்கிரோம் தனது தொலைபேசியில் பெல் அடிப்பது குறித்து தகவலையும், கேமரா மூலம் யார் வந்துள்ளார்கள் என்பதையும் பார்த்தார். வில்சன் மில்கிரோமிடம் நோபல் பரிசு உங்கள் கணவர் வென்றுள்ளார் என கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர் நெகிழ்ச்சி அடைந்ததுடன். கணவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுவதை நேரலையில் பார்க்க வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    பால் மில்கிரோம் வீட்டு கதவை சக வெற்றியாளரான ராபர்ட் வில்சன் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+