'கடவுள் துகள்’ கண்டறிந்த.. நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
லண்டன்: 'கடவுள் துகள்' எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியுமான பீட்டர் வேர் ஹிக்ஸ் காலமானார்.
'கடவுள் துகள்' எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியுமான பீட்டர் வேர் ஹிக்ஸ் காலமானார். அவருக்கு வயது 98. பிரிட்டனை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பீட்டர் ஹிக், இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார்.

குறிப்பாக ஹிக்ஸ் போசான் துகள் என்று அழைக்கப்படும் Mass Giving Paricle மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக எங்லெர்ட்டுடன் இணைந்து 2013-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது மட்டும் இன்றி , ஹியூஸ் பதக்கம், ரூதர்ஃபோர்டு பதக்கம், டிராக் பதக்கம், வுல்ஃப் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் பதக்கம், எடின்பர்க் ராயல் சொசைட்டி பதக்கம், காப்ளே பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்த பீட்டர் ஹிக்ஸ் தனது 96-வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஏப்ரல் 8 ஆம் தேதி தனது இல்லத்தில் பீட்டர் ஹிக்ஸ் காலமானார்.
லேசான உடல் நலக்கோளாறு ஏற்பட்டு இருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக அவர் பேராசிரியாக இருந்தார். அவர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விளங்கினார். பல இளைய விஞ்ஞானிகளுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் விளங்கி வந்ந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், கணித இயற்பியலில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்த இவர் நாளடைவில், ரீடராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக பதவியேற்று, 1996-ல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார். அணுத்துகள் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார்
போசான் துகள்கள் குறித்து 1960-ஆம் ஆண்டுகளில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். தனது ஆய்வு முடிவுகளை 'ஃபிசிக்ஸ் லெட்டர்ஸ்' என்ற தலைப்பில் வெளியிட்டார். தனியாகவும், பல்வேறு ஆய்வுக் குழுக்களில் இணைந்தும் பீட்டர் ஹிக்ஸ் பணியாற்றினார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி எங்லெட்ர்டுடன் இணைந்து போசான் துகள்கள் குறித்து ஆராய்ந்தார். தற்போது இவரது பெயரால் 'ஹிக்ஸ் போசான்' துகள் எனக் குறிப்பிடப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications