சூப்பர்மேனின் முதல் "கேர்ள் பிரண்ட்" நோயல் நீல் காலமானார்
நியூயார்க்: சூப்பர்மேன் திரைப்படத்தில் அவரது தோழியாக முதன்முதலாக நடித்த நடிகை நோயல் நீல் காலமானார். அவருக்கு வயது 95.
வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் சூப்பர்மேன். இவரது தோழியாக அறியப்படுபவர் லேன்.
இந்தக் கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைப்படங்களில் நடித்தவர் தான் நோயல் நீல்.

பாடகர் பணி...
அமெரிக்காவின் மின்னபோலீஸில் 1920ம் ஆண்டு நவம்பர் 25-ல் பிறந்தவர் நீல். பள்ளி படிப்பை முடித்ததும் கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்தவர், அங்குள்ள ஒரு உணவகத்தில் பாடகராக பணிக்கு சேர்ந்தார்.

சிறிய வேடங்கள்...
அதன் மூலம் ஹாலிவுட்டின் பாராமவுண்ட் ஸ்டூடியோவின் பரிச்சயம் அவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1940களில் ஹாலிவுட் சினிமாவில் சிறிய வேடங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார்.

சூப்பர்மேனின் தோழியானார்...
நீலின் திறமையை கண்டு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் 1948ல் சூப்பர்மேன் திரைப்படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தது. இந்தப் படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் கிரிக் அலினும், அவரது தோழியாக வரும் லேன் கதாபாத்திரத்தில் நோயல் நீலும் நடித்திருந்தனர்.

சீரியல்...
அதன் தொடர்ச்சியாக 1950-ல் ஜார்ஜ் ரீவிஸ் நடிப்பில் உருவான சூப்பர்மேன் தொலைக்காட்சி தொடரிலும் நீல் நடித்தார். 1978ல் திரைப்படமாக உருவான சூப்பர்மேனில் அவர் நடித்தார்.

தங்கக்காலணி விருது...
லூயிஸ் லேன் கதாபாத்திரத் தில் சிறப்பாக நடித்தமைக்காக மெட்ரோ போலீஸில் நீலுக்கு 2010-ல் சிலை நிறுவப்பட்டது. தங்க காலணி விருதும் வழங்கி அவர் கவுரவிக்கப் பட்டார்.

மரணம்...
இந்நிலையில், சமீபகாலமாக வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நீல், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டஸ்கானில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications