கேமரூனில் தற்கொலைப் படை தாக்குதல்: 25 பேர் பலி; பலர் படுகாயம் !
டுவலா: கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கேமரூனின் போடோ நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மத்திய மார்க்கெட் பகுதியில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நகரின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் நுழைந்த 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
போடோ நகரை தீவிரவாதிகள் குறிவைப்பது இது முதல் முறையல்ல. டிசம்பர் இறுதியில் இரண்டு பெண் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மார்க்கெட்டுக்குள் வருவதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஜனவரி 13ல் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications