கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான் நடத்துவோம்.. வடகொரியா முடிவின் ஷாக் பின்னணி
பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொல்லப்பட்டாலோ அல்லது அவர் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாலோ எதிரி நாடுகள் மீது உடனடியாக அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடகொரியா என்பது சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர பிற நாடுகளுடன் நெருக்கமாக நட்பு பாராட்டுவது கிடையாது. குறிப்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் கடும் மோதல் உள்ளது. அண்டை நாடுகளாக உள்ள ஜப்பான், தென்கொரியாவுடன் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

தென்கொரியாவில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளிநாடுகளுக்கு பயணிப்பது கிடையாது. இதனால் தன்னையும், தன் நாட்டையும் பாதுகாக்க தேவையான ஆயுதங்களை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தயாரித்து குவித்து வைத்துள்ளார். வடகொரியாவிடம் அணுஆயுதமும் உள்ளது.
வடகொரியா அணுஆயுதம் வைத்திருக்கிறது என்பதாலே அமெரிக்கா அந்த நாட்டை தேவையின்றி சீண்டுவது இல்லை. அதேவேளையில் தென்கெரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையை கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது வடகொரியாவின் அணுஆயுத கொள்கையில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிம் ஜாங் உன் உள்பட நாட்டை பாதுகாப்பதில் அணுஆயுதம் முக்கியமானதாக இருக்கும். கிம் ஜாங் உன் மீது எதிரி நாட்டு படைகள் தாக்கி அவர் உயிரிழந்தாலோ அல்லது செயல்பட முடியாத நிலைமைக்கு போனாலோ உடனடியாக அந்த நாட்டின் மீது அணுஆயுதம் கெண்டு 'அட்டாக் செய்யலாம். தானியங்கி (ஆட்டோமெட்டிக்) முறையில் தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தம் என்பது அமெரிக்கா மீதான பயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்கா சமீபகாலமாக தனது எதிரிகளை நாடு புகுந்து சிறை பிடிப்பது, கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் நாடு புகுந்து கைது செய்தது. டொனால்ட் டிரம்ப் மற்றும் நிகோலஸ் மதுரோ இடையே தொடர்ந்து மோதல் இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
அதன்பிறகு ஈரான் - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. போர் உருவானது. மார்ச் மாதம் தொடக்கத்தில் ஈரான் அதிபர் அயதுல்ாஅலி கமேனி அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பிறகு தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கியூபாவை குறிவைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் , வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னையும் குறிவைக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் தான் கிம் ஜாங் உன் தனது நாட்டின் அணுஆயுத கொள்கையில் திருத்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications