வித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி!
வடகொரியா மீண்டும் ஆயுதங்களை விண்ணில் ஏவி பரிசோதிக்க தொடங்கி உள்ளது.
பியோங்யாங்: வடகொரியா மீண்டும் ஆயுதங்களை விண்ணில் ஏவி பரிசோதிக்க தொடங்கி உள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. ஆனால் போக போக இது சரியாகி இரண்டு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துக்கொண்டார்கள்.
அதேபோல வடகொரியா தென்கொரியா பிரச்சனையும் சரியானது. இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து, எல்லைகளை கடந்து பேசிக்கொண்டனர்.

என்ன சிக்கல்
சில நாட்களில் தென் கொரியாவும் வடகொரியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறியது. ஆனால் போக போக இந்த சூர்யவம்சம் குடும்பத்தில் ''மரிக்கொழுந்து சென்ட் போட்ட மைனர்'' போல அமெரிக்கா மீண்டும் தலையை நுழைத்தது. மீண்டும் அமெரிக்கா தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பிரச்சனை வந்தது.

என்ன செய்தது
வடகொரியாவை பயமுறுத்தும் பொருட்டு அமெரிக்கா தென்கொரியா இரண்டு நாடுகளும் இணைந்து ஆயுத பயிற்சியில் ஈடுப்பட்டது. கடலோரத்தில் இரண்டு நாடுகளும் போர் பயிற்சி செய்தது. இது வடகொரியாவை பெரிய கோவத்திற்கு உள்ளாக்கியது. முக்கியமாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் பெரிய அளவில் இதனால் கோபம் அடைந்தார்.

என்ன நிறுத்தினார்
அதேபோல் தென்கொரியாவுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை கிடையாது என்றும் அறிவித்தார். அதேபோல் மீண்டும் நாங்கள் ஆயுத சோதனைகளில் ஈடுப்பட போகிறோம் என்றும் கூட கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை இதற்காக முதற்கட்டமாக ஏவுகணை சோதனைகளை செய்தார்.

மீண்டும் செய்கிறார்
இதையடுத்து நேற்று நள்ளிரவில் வடகொரியா மீண்டும் ஆயுதங்களை விண்ணில் ஏவி பரிசோதித்து உள்ளது. இரண்டு புதிய ரக வித்தியாசமான ஏவுகணைகளை விண்ணில் ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. அமெரிக்காவை இந்த சோதனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications