நியூயார்க் நகரை நிர்மூலமாக்கும் அணு ஆயுதம்.. ஷாக் கொடுத்த வடகொரியா! அச்சத்தில் உலக நாடுகள்
பியாங்யாங்: அமெரிக்காவை முழுமையாக அழிக்காவிட்டாலும் கூட, நியூயார்க் போன்ற பெரிய நகரங்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் வகையில் புதிய அணு ஆயுதத்தை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த ஆயுதம் தற்போது வெளியில் மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
வடகொரியாவை 'தொழிலாளர் கட்சி'தான் தற்போது ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் தலைவரான கிம் ஜான் உங், அதிபராக இருக்கிறார். இக்கட்சி உருவாக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் விதமாக நேற்று வடகொரிய தலைநகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் கட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அமெரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன.

அணு ஆயுதங்களுக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கும் வடகொரியா பெயர் பெற்றது. பக்கத்திலிருக்கும் தென்கொரியா, அமெரிக்காவுடன் சேர்ந்து அடிக்கடி ராணுவ பயிற்சியை மேற்கொள்வதால், தங்கள் பலத்தை நிரூபிக்க வடகொரியாவும் இப்படியான ஏவுகணை சோதனைகளை நடத்தும். அந்த வகையில், தற்போது புதிய ஏவுகணையை வடகொரியா காட்சிப்படுத்தியிருக்கிறது. இதற்கு 'ஹ்வாசாங்-20' என பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இது சோதனை செய்து பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த ஆயுதம் எப்படி இருக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
இந்நிலையில் முதன்முறையாக இந்த ஆயுதத்தை, அந்நாட்டு அரசு வெளியில் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும். சாதாரண எரிபொருட்களை அல்லாமல், அணு ஆயுதங்களை இந்த ஏவுகணை சுமந்து செல்லும். அதிகபட்சமாக 15,000 கி.மீ வரை இந்த ஏவுகணை சென்று தாக்கும். வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரத்திலிருந்த இந்த ஏவுகணையை ஏவினால் அது வடஅமெரிக்காவில் உள்ள நியூயார்க், வாஷிங்டன், மியாமி, சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களை முழுமையாக தாக்கி அழித்துவிடும்.
அதேபோல கனடாவின் டொராண்டோ, மாண்ட்ரீல், தென்அமெரிக்காவின் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ், பிரேசிலின் சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை பொறுத்தவரை லண்டன், பாரிஸ், பெர்லின் ஆகியவற்றையும் ஆப்பிரிக்காவின் கேப் டவுன், லாகோஸ் நகரங்களையும், ஆஸ்திரேலியா சிட்னி, மெல்போர்ன் நகரங்களையும் இந்த ஆயுதம் தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஆயுதம் நியூயார்க் நகரை தாக்கும்போது,
0.5 கி.மீ சுற்றளவில்
புல், பூண்டு கூட இருக்காது. எல்லா கட்டிடங்களும் வெப்பத்தால் ஆவியாகிவிடும். மனிதர்கள் இருந்ததற்கான அடையாளமே இருக்காது.
1.8 கி.மீ சுற்றளவில்
எல்லா கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகிவிடும். ஒருவரும் உயிர் தப்பிக்க முடியாது.
4 கி.மீ சுற்றளவில்
கடுமையான தீ விபத்து ஏற்படும். இந்த சுற்றளவில் இருப்பவர்களும் மரணித்துவிடுவார்கள்.
8 கி.மீ சுற்றளவில்
வெப்பம் காரணமாக, திறந்த வெளியில் இருக்கும் நபர்களுக்கு மூன்றாவது நிலை தீக்காயங்கள் ஏற்படும். பல கிலோமீட்டர் சுற்றளவில் மரங்கள் மற்றும் பிற பொருட்கள் தீப்பிடிக்கும். இங்கும் உயிரிழப்புகள் ஏற்படும்.
15 கி.மீ சுற்றளவில்
ஜன்னல்கள் உடையும், கான்கிரீட் சுவர்கள் விரிசல் அடையும். மக்களுக்கு காயங்கள் ஏற்படும். உயிரிழப்புகள் அதிகமாக இருக்காது
200 கி.மீ சுற்றளவில்
இந்த சுற்றளவில், கதிர்வீச்சுகள் பயங்கரமாக இருக்கும். எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications