ஒரு வாரத்தில் இரண்டு முறை... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. தென்கொரியா அதிர்ச்சி
பியாங்யாங்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.

பின்னர், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில், கொரிய எல்லைக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்து கைகுலுக்கினார். இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து கோபமடைந்த வட கொரியா கடந்த வியாழனன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்றதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், அதிகாலை குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் இரண்டை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
இதனிடையே, தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications