பெரும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்தது புதிய ஏவுகணை: வடகொரியா
ஞாயிறுக்கிழமையன்று தாங்கள் நடத்திய புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை, மிக பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த ஒரு புதிய வகை ராக்கெட் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ மீட்டர் உயரத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட, 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.
புதிதாக பேலிஸ்டிக் ராக்கெட்டை உருவாக்கிய தங்களின் திறமையை பறைசாற்றவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”
ஐ .நா. சபை அமைப்பு விதித்த தடைகளை மீண்டும் மீறும் விதமாக அமைந்த இந்த சோதனைகள் பரவலாக கண்டனங்களை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மீண்டும் மீண்டும் வட கொரியா நடத்திய பல சோதனைகள் சர்வதேச அளவில் எச்சரிக்கை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவுடனான வட கொரியாவின் உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியா நடத்திய இவ்வாறான சோதனைகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று ஐ .நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஓர் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்காவும், ஜப்பானும் அழைப்பு விடுத்துள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட நடுத்தர / தூர வகை மூலோபாய பேலிஸ்டிக் ராக்கெட்டான வாஸோங்-12 திட்டப்படி செலுத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி முகமை திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது.
''எடை அதிமுள்ள மிகப் பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பேலிஸ்டிக் ராக்கெட்டின் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப குறிப்புகளை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது'' என்று கேசிஎன்ஏ செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பொழுதும் போல் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்நின் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றதாக கேசிஎன்ஏ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்
வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்
வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா
இதையும் படிக்கலாம் :
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை
மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்
'நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது' : பாரீஸ் ஜாக்சன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications