சீனாவுக்கு மிக அருகே.. பெரிய சம்பவத்தை செய்த வடகொரியா.. கிம் ஜாங் பலே ஆள் தான்! யாருக்கு ஆபத்து?
பியோங்யாங்: அணு ஆயுதங்களில் வடகொரியா சத்தமில்லாமல் மிக பெரிய விஷயங்களை செய்து வருகிறது. இதற்கிடையே வடகொரிய அணு ஆயுதங்கள் எந்தளவுக்கு ஆபத்தானது.. அதன் புதிய தளம் எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமான ரகசிய இடத்தில் அமைந்துள்ள இந்த தளம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் உலகின் அனைத்து நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பில் தான் உள்ளன. ஆனால், இப்போதும் கூட தனித்து இயங்கும் நாடுகளில் ஒன்று வடகொரியா. கிம் ஜாங் அதிபராக இருக்கும் வடகொரியா தனித்தே இயங்கி வருகிறது. மேலும், சத்தமில்லாமல் அணு ஆயுதங்களையும் உருவாக்கி வருகிறது. இதற்கிடையே வடகொரிய ராணுவம் குறித்து இப்போது சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் சீக்ரெட் தளம்
அதாவத சீன எல்லைக்கு அருகில் வட கொரியா தனது அதிநவீன ராணுவ மையத்தை உருவாக்கியுள்ளதாம். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இங்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை தளம் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அணுசக்தி தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்கான வட கொரியாவின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.
வட பியோங்கான் மாகாணத்தில், சின்புங் நகரில் சீன எல்லையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் ஒன்பது அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் மொபைல் லாஞ்சர்கள் உள்ளன. வடகொரிய ஆயுதங்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் சர்வதேச அமைப்பு இது குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
யாருக்கு ஆபத்து
இந்த ஏவுகணைகள் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும், "நெருக்கடி அல்லது போர் காலங்களில், இந்த லாஞ்சர்கள் மற்றும் ஏவுகணைகள் தளத்தை வைத்து லாஞ்சர்கள் வடகொரியாவுக்கு முக்கியமானதக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் கட்டுமானம் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலான கட்டமை்புகள் கட்டி முடிக்கப்பட்டு, அது செயல்படத் தொடங்கிவிட்டதாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 2014ல் உடன் இந்த கட்டுமானம் முடியவில்லை. நவீன காலத்திற்கு ஏற்ப இதில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் முத்தியம்
வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளை தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலையும், வரும் கால திட்டத்தையுமே இது காட்டுகிறது. வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கு ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக இருப்பதையே இது காட்டுகிறது. மேலும், ஓரே தாக்குதலில் அழியாத வகையிலும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு
குறிப்பாக இந்த தளம் சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ளதால் வெளியூலகில் இருந்து கூடுதல் பாதுகாப்பை இது தானாகவே பெறுகிறது. கட்டுமானம் தொடர்ந்து நடந்து வந்தாலும் கூட இது முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் 2016-2020 காலகடடத்தில் அதிபராக இருந்த போது கிம்மை மூன்று முறை நேரில் சந்தித்து பேசினார். அணு ஆயுதங்களை கைவிடும்படி வலியுறுத்தினார். இருப்பினும், அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications