"கரச்சான் மண்டை" வட கொரிய தலைவரை ரொம்ப நாளா காணோமே....?
பியான்ங்யாங், வட கொரியா: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன் கடந்த பல வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். இதனால் அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அவர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார் என்பது வட கொரியாவில் யாருக்குமே தெரியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. அவர் பொது இடத்தில் தோன்றி பல வாரமாகி விட்டதாம்.
வட கொரிய அரசின் முக்கிய உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் கூட இந்த கிம் ஜோங் உன் கலந்து கொள்ளாததால் பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றத் திறப்புக்கும் வரலையே
வட கொரிய நாடாளுமன்றம் மீண்டும் திறகப்பட்ட நிகழ்ச்சியிலும் கூட 31 வயதான கிம் கலந்து கொள்ளவில்லை.

உடம்புக்கு ஏதாச்சும்
கிம்முக்கு 31 வயதுதான் என்றாலும் கூட அவர் ஓவர் வெயிட்டுடன் இருப்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது எப்போது பார்த்தாலும் வெண்ணெய், பாலாடைக் கட்டி உள்ளிட்டவற்றை விரும்பிச் சாப்பிடுவார். இதனால் எடை கூடி விட்டது. இதனால் அவர் பல உடல் உபாதைகளாலும் கூட அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

உன்னிப்பாக கவனிக்கும் தென் கொரியா
கிம் என்ன ஆனார், எங்கே போனார் என்பது குறித்து மற்றவர்களை விட அருகில் இருக்கும் தென் கொரியதான் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது. உளவாளிகளையும் அது முடுக்கி விட்டுள்ளது.

அப்பா இறந்த பிறகு
2011ம் ஆண்டு கிம்மின் தந்தை கிங் ஜோங் இல் மரணமடைந்தார். அதன் பிறகு வட கொரியாவை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார் கிம்.

செப்டம்பர் 3 முதல் மிஸ்ஸிங்
கிம் செப்டம்பர் 3ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 3ம் தேதி தனது மனைவியுடன் கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டார். அதுதான் கடைசி.. அதற்குப் பிறகு ஆளையே காணவில்லை.

நடக்கக் கூட முடியலையாமே
சமீப காலமாக நடக்கக் கூட முடியாமல் கிம் அவதிப்பட்டு வந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. எனவே அவருக்கு சீரியஸான உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

2012ல் 2 வாரம் எஸ்கேப் ஆனவர்
ஆனால் கிம் இப்படி திடீரென காணாமல் போவது புதிதல்ல. கடந்த 2012ம் ஆண்டில் கூட அவர் 2 வாரம் காணாமல் போய் விட்டார். பின்னர் திடீரென திரும்பி வந்தார். எங்கே போயிருந்தார் என்பதை அவரும் விளக்கவில்லை. ஏன் சார் காணாமல் போனீங்க என்று யாரும் கேட்கவும் இல்லை.
காணாமல் போனவருக்குத் திரும்பி வரத் தெரியாமலா போகும்.. வரட்டும்.. வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications