எல்லோரும் அதிபர் மாதிரி 'கரச்சா மண்டை'க்கு மாறுங்க..வடகொரியாவில் உத்தரவு!!

Subscribe to Oneindia Tamil

வடகொரியா: அதிபர் கிம் ஜாங் உன் மாதிரிதான் இனி ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்று வடகொரியாவில் உள்ள இளைஞர்களுக்கு அரசு உத்தரவுட்டுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை அலறவைத்த கிம் ஜாங் உன் இப்போது உள்ளூர் இளசுகளை எகிறவைத்திருக்கிறார்.

பொதுவாக, எல்லா நாட்டு அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மக்களோட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புல கண்ணுங் கருத்துமா இருக்கும், அதுக்காக சட்டதிட்டங்களைக் கொண்டுவரும்.

ஆனால், வட கொரியா அரசு கண்ணையும் கருத்தையும் வெச்சது தன் மக்களோட மண்டையில. உலகத்திலேயே நாங்கதான் சிறப்பா அரசு நடத்துறோம் என்று சொல்லும் வடகொரிய அரசு, 'எப்படித் தங்கள் நாட்டு மக்கள் முடி வெட்டிக்கொள்ள வேண்டும்' என்று ஆண்களுக்கு 28 விதமான ஹேர் ஸ்டைல்கள் கொண்ட பட்டியலை முன்பு வெளியிட்டது. பெண்களுக்கு 18 விதமான ஹேர்ஸ்டைலை வெளியிட்டது. ஆனால் இப்போதோ அதிபரை மாதிரிதான் முடிவெட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மனசுக்கு பிடிச்ச ஹேர் ஸ்டைல்

மனசுக்கு பிடிச்ச ஹேர் ஸ்டைல்

சில இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த திரை நட்சத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்களை போன்று தலைமுடியை மாற்றி வைத்துக் கொள்வர். ஆனால் நாட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், நாட்டின் அதிபரைப் போலவே தலைமுடி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என வட கொரிய அரசு உத்தரவிடப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

28 ஹேர் ஸ்டைல்

28 ஹேர் ஸ்டைல்

அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு 28 விதமான முடி அலங்காரங்களைத் தவிர, யாராவது 'எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி'னு ஒரு ஹேர் ஸ்டைலை ட்ரை பண்ணீங்கனா, கம்பி எண்ண வேண்டியதுதான் என்ற அறிவிப்பு வெளியிட்டார்.

பெண்களுக்கு 18

பெண்களுக்கு 18

18 ஸ்டைல் பொண்ணுங்களுக்கு. பத்தே பத்து ஸ்டைல்கள்தான் ஆண்களுக்கு. விருப்பப்பட்டால் பெண்கள் நீண்ட சுருள் முடி, பின்னல் போன்று அவர்கள் விரும்பும் புதிய அலங்காரங்களையும் செய்துகொள்ளலாம்.

15 நாளைக்கு ஒருமுறை

15 நாளைக்கு ஒருமுறை

ஆனால், ஆண்கள் ஸ்பைக், குயிப் போன்ற எந்தவொரு நியூ டிரெண்ட் ஹேர்ஸ்டைலையும் வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், ஆண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக முடி வெட்டிக்கொள்ள வேண்டும். அதுவும், முடியின் நீளம் 5 செ.மீ-தான் இருக்கணும். ஆனால், ராணுவ வீரர்களுக்கு 7 செ.மீ வரை முடி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

இனி ஒரே ஹேர் ஸ்டைல்தான்

இனி ஒரே ஹேர் ஸ்டைல்தான்

கடந்த ஆண்டு வடகொரிய ஆண்கள் 28 விதமான தலைமுடி அலங்காரம் வைத்துக் கொள்ள அனுமதி அளித்த அந்நாட்டு அரசு, தற்போது அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தலைமுடியை பின்பற்றுமாறு அங்குள்ள ஆண்களுக்கு உத்தரவு போட்டுள்ளது.

அரசு உத்தரவை மீறினால்…

அரசு உத்தரவை மீறினால்…

‘எங்கள் தலைவரின் தலைமுடி அலங்காரம் தனித்தன்மை வாய்ந்தது' என்று ஒரு சாரார் கூறினாலும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான முகமும்-தலையும் இருப்பதால், எல்லாருக்கும் எப்போதும் இந்த அலங்காரம் ஒத்து வராது என்று மற்றொரு பிரிவினர் கூறத்தான் செய்கிறார்கள். எனினும் அரசு உத்தரவை மீற முடியுமா என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+