‘தாதா’ அமெரிக்காவின் கடைசி பக்கங்களை நாங்களே எழுதுவோம்...: கொழந்தசாமி எச்சரிக்கை
பியாங்ஹாங்: 'எங்களை வீழ்த்த நினைக்கும் அமெரிக்காவை அழிப்போம், அவர்களின் கடைசி பக்கத்தை நாங்களே எழுதுவோம்' என வடகொரியா மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் கொரியா - அமெரிக்க படைகள் வரும் மார்ச் மாதம் வழக்கமான தங்களது ராணுவ கூட்டுப் பயிற்சியை துவங்க உள்ளன. இந்த முறை ராணுவ கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டால் அதற்கு எதிராக அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் வசம் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையம் சார்பில், ‘அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இறுதி தண்டனையைச் சந்திப்பீர்கள்' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போர்ச் சூழலை கொளுத்தி போட்டு அதனை தீவிரப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்கிறது. வட கொரியாவின் பலத்தை வீழ்த்த அனைத்து வழியிலும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
தாதா அரசியல் நடத்தும் அமெரிக்கா: இது போன்ற மிரட்டலால் ஏகாதிபத்தியவாதிகளாக இருக்க விரும்பும் அமெரிக்காவுடன் உடன்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏதும் இல்லை.
தாதாவாக வலம் வரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை ஏற்படுத்த எப்போதும் வட கொரிய மக்களும் ராணுவமும் விரும்பவில்லை.
அமெரிக்க வரலாற்றின் கடைசிப் பக்கங்களை எழுதப்போவது வட கொரியாவாகத்தான் இருக்கும். இதற்காக தரைவழி, வான்வழி, கடல்வழி, கடலுக்குகீழ் , அணுசக்தி தாக்குதல் , சைபர் மோதல் என எந்த வகையிலான தாக்குதல்களையும் நாங்கள் அமெரிக்கா மீது நடத்த தயாராக இருக்கிறோம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வட கொரியா மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். ஆனால் இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு இல்லை என்று வட கொரியா தெரிவித்தது.
இதனை அடுத்து கடந்த ஜனவரி 22-ஆம் தேதி சைபர் தாக்குதல் குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா வடகொரியாவைக் குறிப்பிட்டு, "உங்களது ராஜ்ஜியம் வீழ்வதை கண்கூடாக பார்க்கும் நேரம் வரும்" என்று காட்டமாக பேசியிருந்தார்.
ஒபாமாவின் பேச்சுக்கான பதிலடியாக, அமெரிக்காவை எச்சரித்து வடகொரியா இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications