"என்னையே தேடுறியா?".. கொக்கரித்த கிம் ஜாங் உன்.. அடுத்து நிகழ்ந்த பயங்கரம் - நடுங்கும் வட கொரியா
வட கொரியாவில் உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ப்யாங்யங்: சர்வாதிகார நாடான வட கொரியாவில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு அந்நாட்டு மக்கள் பயத்தில் நடுங்கி வருகின்றனர். உச்சபட்ச தண்டனையாக கருதப்படும் மரண தண்டனையை சாதாரண விஷயங்களுக்கு கூடவா விதிக்க வேண்டும் என மக்கள் புலம்பும் அளவுக்கு ஒரு பயங்கர சம்பவம் அங்கு நடந்திருக்கிறது.
வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு என்ன கூறினாலும் அதை அந்நாட்டு மக்கள் எந்தவொரு எதிர்க்கேள்வியும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும். மீறுபவர்களுக்கு மரணம் நிச்சயம்.
மேலும், வட கொரியாவில் இணையதளம் கூட கிடையாது. ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல்தான் அங்கு இயங்கி வருகிறது. அதிலும் அதிபரின் உரையும், அவரது பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். இதனால் வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகுக்கு தெரியவராது.

சிரிக்கக் கூடாது..
வட கொரியாவில் நடைபெறும் விஷயங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் மிகக் கொடூரமாகவும் இருக்கும். அதில் ஒன்றுதான், மக்கள் சிரிக்கக்கூடாது என்ற உத்தரவு. அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையின் நினைவு தினம் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு அனுசரிக்கப்படும். இந்த 10 நாட்களும் வட கொரியா மக்கள் சோகத்தில் மூழ்கி இருப்பார்கள். இல்லை.. இல்லை.. சோகத்தில் மூழ்கியிருக்க வேண்டும். அதுதான் உத்தரவு. இந்த 10 நாட்களும் மக்கள் யாரும் லேசாக கூட சிரித்துவிட கூடாது. குடும்பத்த்தினருடனோ, நண்பர்களுடனோ வெளியே செல்லக்கூடாது. ஷாப்பிங் செய்யக்கூடாது. இதைவிட பெரிய கொடுமை.. அந்த நாட்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டு அழவும். இந்த விதிகளை மீறினால் முடிந்தது கதை. மரணம் உங்களை தழுவிக்கொள்ளும்.

சினிமா, நாடகம் பார்த்தாலும்..
மேலும், வட கொரியாவில் தொலைக்காட்சி, திரையரங்கு, இணையதளம் என எதுவும் கிடையாது என்பதை பார்த்திருந்தோம். எனவே அந்நாட்டு மக்கள் பொழுதுபோக்கு என எதுவுமே இல்லை. இதனால், பக்கத்து நாடான தென் கொரியாவில் இருந்து ஏதோ போதைப்பொருட்களை கடத்தி வருவது போல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் சிடிக்கள் கடத்தி வரப்படும். சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் இந்த சிடிக்களை சிலர் வாங்கி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் அமைதியாக பார்ப்பார்கள். தென் கொரியா அண்டை நாடு என்பதால் அந்நாட்டு சினிமாக்களை பார்ப்பது வட கொரியாவில் தேச விரோதத்துக்கு சமமான குற்றம். இவ்வாறு தென் கொரிய படங்களை பார்த்த பலர் கடந்த காலங்களில் தூக்கில் போடப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, இந்தக் குற்றத்துக்காக 12 வயதான 2 சிறுவர்களை இரக்கமின்றி பொதுவெளியில் தூக்கில் போட்டது வட கொரியா அரசு.

எமனாக மாறிய "கூகுள் சர்ச்"..
இந்த சூழலில்தான், மற்றொரு பயங்கர சம்பவம் வட கொரியாவில் நடந்திருக்கிறது. வட கொரியாவில் இணையதளம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், ராணுவ உயரதிகாரிகளுக்கும், உளவுத்துறையினருக்கும் இணையதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க அரசாங்கக் குழு ஒன்று உள்ளது. இந்நிலையில், வட கொரிய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் அதிபர் கிம் ஜாங் உன் குறித்து சாதாரணமாக கூகுளில் தேடி பார்த்திருக்கிறார்.

கொந்தளித்த கிம் ஜாங் உன்
இதையடுத்து, இந்த விஷயத்தை அதிபர் கிம் ஜாங் உன்னிடம் அந்த அரசாங்க குழு இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது. அவ்வளவுதான். கோபத்தில் கொக்கரித்திருக்கிறார் கிம் ஜாங் உன். "எப்படி என்னை பற்றி இணையத்தில் தேடலாம்.." என கொந்தளித்துள்ளார். பின்னர், உடனடியாக தனது மெய்க்காப்பாளர்களை அழைத்த கிம் ஜாங் உன், அந்த உளவுத்துறை அதிகாரிக்கு துப்பாக்கிப் படையினரால மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இன்று அந்த அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொடுமை..












Click it and Unblock the Notifications