வாய் வைத்த அமெரிக்கா.. கடலில் பொத்தென்று விழுந்த உளவு செயற்கைக்கோள்.. டென்ஷனில் வடகொரியா
வாஷிங்டன்: வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைகோள் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் செயற்கைகோள் ஏவும் திட்டத்தை விமர்சித்து அமெரிக்கா பேசியிருந்த நிலையில் வடகொரியா கோபமாக விமர்சித்துள்ளது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்குடன் செயல்படும் வடகொரியா, எந்த ஒரு எச்சரிக்கை, அச்சுறுத்தலையும் பொருட்படுத்தலாம் தொடரந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, பாலிஸ்டிக் ரக ஏவுகணை என அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கடுமையான பஞ்சத்தில் வடகொரியா சிக்கி தவித்து வந்தாலும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தாமல் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா ராணுவம் மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் இந்த அடாவடியால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், வடகொரியா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தும் முயற்சியாக உளவு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் செலுத்தப்போவதாக அறிவித்தது. வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து தனது முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
அதன்படி, வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைகோளான மாலிங்யோங் 1-ஐ உருவாக்கியது. இந்த நிலையில், டோங்சாங்-ரி பகுதியில் இருந்து வடகொரியா ட்மாலிங்யோங் 1-ஐ கோலிமா ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் இரவு வடகொரியா விண்ணில் செலுத்தியது. ஆனால், இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் அவையின் தடையை மீறி செயற்கோளை விண்ணில் செலுத்த முயன்ற வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்து இருந்தன.

இது வடகொரியாவிற்கு கடும் எரிச்சலை கொடுத்துள்ளது. இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜான் அன்னின் சகோதரியும் வடகொரியாவில் அதிபருக்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படும் கிம் யோ ஜோங் கூறும் போது, "அமெரிக்கா கேங்ஸ்டர் போல செயல்படுவதாகவும் பாசாங்குத்தனம் காட்டுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் விரைவில் ராணுவ உளவு செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications