அணு ஆயுத டெஸ்டிராயரை இறக்கிய கிம்! சட்டென பாய்ந்த ஏவுகணைகள்! உற்று பார்க்கும் தென்கொரியா & அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

பியோங்யாங்: உலகின் மர்மமான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் வடகொரியா தனது முதல் டெஸ்டிராயர் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. வெற்றிகரமாக இந்தச் சோதனை நடந்ததாகவும் இதை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் நேரில் பார்வையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மற்ற நாடுகளில் இருந்து இன்னுமே தனித்து இருக்கும் நாடு வடகொரியா. அங்கு என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகளுக்கு அவ்வளவு சீக்கிரம் தெரியாது. அந்தளவுக்கு ரகசியமான ஒரு நாடாகவே வடகொரியா இருக்கிறது. மேலும், அங்குள்ள பெரும்பாலான மக்களும் கூட ஏழ்மையான நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

North Korean Leader Kim Jong Un Oversees Launch of New Nuclear-Capable Destroyer

களத்தில் இறங்கிய கிம் ஜாங்

அதேநேரம் வடகொரியா ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தொடர்ந்து மிகப் பெரியளவில் முதலீடு செய்வதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இப்போதும் அப்படித் தான் வடகொரியா தனது புதிய அணு ஆயுதத் திறன் கொண்ட டெஸ்டிராயர் கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவுகணை சோதனையைச் செய்துள்ளது. வடகொரியாவில் இருக்கும் முதல் டெஸ்டிராயர் போர்க்கப்பல் இதுவாகும். இந்தச் சோதனையை வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் தான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுத அமைப்புகளைக் கொண்ட 5,000 டன் எடையுள்ள டேஸ்டிராயர் கப்பல் குறித்து வடகொரியா அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்போது அந்த டெஸ்டிராயர் கப்பலில் இருந்து தான் வெற்றிகரமாகச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த டெஸ்டிராயர் கப்பல் வட கொரியாவின் கடற்படைப் படைகளை நவீனமயமாக்குவதில் ஒரு திருப்புமுனை என கிம் ஜாங் குறிப்பிட்டார்.

ரஷ்யா உதவி

வட கொரிய கடற்படையின் முதல் டெஸ்டிராயர் கப்பல் இது எனச் சொல்லப்படுகிறது. இது ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகப் பார்க்கும்போது வடகொரியக் கடற்படையை விடத் தென்கொரியக் கடற்படை பல மடங்கு வலிமையானதாக இருக்கிறது. அணு ஆயுதத் திறன் கொண்ட இந்த டெஸ்டிராயர் கப்பல் வட கொரியா கடற்படைக்கு முக்கியமான பூஸ்ட்டை கொடுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த டெஸ்டிராயர் கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணை, தானியங்கி துப்பாக்கிகள் என பல்வேறு வகையான சோதனைகள் நடந்ததாகவும் அதை கிம் ஜாங் நேரில் கவனித்ததாகவும் வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்போது கப்பலின் திறனையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங்

இது தொடர்பாக கிம் ஜாங் பேசுகையில், "இந்த டெஸ்டிராயர் கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் சேர்க்கப்படும். அடுத்த கட்டமாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வாங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இது கடற்படையை வலுப்படுத்துவதாக இருக்கும். அமெரிக்கா உடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நாம் நமது கடற்படையை வலிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது" என்றார்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

போர்க்கப்பல் போட்டோக்களையும் வடகொரியா வெளியிட்டுள்ள நிலையில், அதைச் சர்வதேச வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். அந்தக் கப்பலில் உள்ள ஆன்ட்டி ரேடார் அமைப்புகளைப் பார்க்கும்போது அவை ரஷ்யாவில் இருந்து வந்திருப்பதைப் போலவே தெரிவதாக வடகொரியப் பாதுகாப்பு நிபுணர் லீ இல்வூ கூறினார். போர்க்கப்பலின் எஞ்சின் சிஸ்டம் மற்றும் ஆன்ட்டி ரேடார் அமைப்புகளை வடகொரியா ரஷ்யாவில் இருந்து வாங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தென்கொரியா

அதேநேரம் தென் கொரியா- வடகொரியா இடையே பல காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. வடகொரியாவின் இந்த புதிய டெஸ்டிராயர் கப்பல் ஏவுகணை சோதனையைத் தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத் துறை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா ஆதரவில்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+