கொழுகொழுனு பாலில் ஊறிய பன்னு மாதிரி இருப்பாரே.. என்னாச்சு "குழந்தைசாமி"க்கு.. இப்படி மெலிஞ்சுட்டாரே
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடை குறைந்து மெல்லிய தோற்றத்திலிருப்பது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.
Recommended Video
வடகொரிய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். நல்ல திடகாத்திரமாக இருப்பார். இதுவே இவரது அடையாளமாகும். இந்த நிலையில் கடைசியாக பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு 4 மாதங்கள் வரை அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததால் அவருக்கு என்ன ஆயிற்று என மக்கள் கவலைக் கொள்ள ஆரம்பித்தனர்.

இறப்பு
கடந்த ஆண்டும் இவர் இதே போல் தலைமறைவாக இருந்தார். அவர் இறந்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவித்தன. பின்னர் கொரோனா தொற்றுக்கு அஞ்சி இவர் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சில காலம் கழித்து பொதுவெளியில் கிம் தோன்றினார்.

கவலை
அதே போல் இந்த முறையும் ஆளைக் காணாததால் மக்கள் கவலையடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு ஜூன் 6 ஆம் தேதி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரது தோற்றத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிம் ஜாங் உன் தனது உடல் எடையை இழந்து ஒல்லியான தோற்றத்தில் இருந்தார்.

மொழுக்கு
இதையடுத்து நன்றாக கொழுக்கு மொழுக்கு என்றிருந்தவர் திடீரென எலும்பு தோலுமாக இருந்ததை பார்த்த அந்நாட்டு மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இவர் 140 கிலோ எடையை கொண்டிருந்ததாகவும் தற்போது 20 முதல் 30 கிலோ வரை எடையை இழந்திருப்பதாகவும் தெரிகிறது. கிம் ஜாங் உன்னின் எடை குறைப்பு என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தாத்தா, தந்தை
அதாவது கிம்மின் தாத்தாவும் தந்தையும் மாரடைப்பால் இறந்துள்ளனர். இதே பிரச்சினை கிம்மிற்கு வர வாய்ப்பிருக்கிறது. மேலும் கிம் நிறைய புகைப்பிடிப்பார், மது அருந்துவார். இதனால் கிம்மிற்கும் இதய பிரச்சினைகள் வராமல் இருக்க உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம் என தெரிகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications