மாஸா! ஸ்டைலா! கெத்தா! ஓஹோய். "ஸ்லோ மோஷனில்" ஹாலிவுட் ஹீரோ மாதிரி ஏவுகணை சோதனைக்கு வந்த கிம் ஜாங் உன்

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை சோதனை செய்தபோது வட கொரியா அதிபர் கிம் ஜான் உன் ஸ்லோ மோசனில் வந்து கவுண்டவுன் எண்ணும் வீடியோவை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி ஏவுகணை சோதனை ஒன்றை நடத்திய வட கொரியா, உளவு செயற்கைக்கோளை விண்ணில் அமைப்பதற்காக அது செலுத்தப்பட்டதாக கூறியது.

இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன், வட கொரியா நடத்தி இருக்கும் சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல் இருப்பதாக சந்தேகித்தது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனை:

வட கொரியாவின் ஏவுகணை சோதனை:

இதனிடையே வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையான வாசாங் 17-ஐ பரிசோதனை செய்தது. வட கொரியா ஏவிய ஏவுகணை ஒரு மணி நேரத்தில் 1,100 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து வந்து தங்கள் நாட்டின் கடலில் விழுந்ததாக ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. கடைசியாக வடகொரியா கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

கிம் ஜாங் உன்னின் மாஸான வீடியோ

கிம் ஜாங் உன்னின் மாஸான வீடியோ

இந்த ஏவுகணை பரிசோதனையை ஹாலிவுட் படங்களில் வருவதைபோல் வீடியோவாக பதிவு செய்து நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டுள்ளது வடகொரியா ராணுவம். அதில் அதிபர் கிம் ஜாங் உன் லெதர் ஜாக்கெட், கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு கைகடிகாரத்தை பார்த்து கவுண்டவுன் சொல்கிறார். இந்த வீடியோ வட கொரியா தனது பாதுகாப்புத்துறை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுவதாக பலர் கருத்திட்டு வருகின்றனர்.

சினிமாக்களை நியாபகப்படுத்தும் வீடியோ

சினிமாக்களை நியாபகப்படுத்தும் வீடியோ

வட கொரியா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ, குவெண்டின் டொராண்டினோவின் ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படத்தையும், தென் கொரியாவின் கேங்ஸ்டர் படமான நியூ வேர்ல்டை திரைப்படத்தையும் நினைவுபடுத்துவதாக கூறுகிறார் கொரியா தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் திரைப்பட கல்வி பேராசிரியர் கிம் சோ யங்.

4 ஆண்டுகள் ஏவுகணை சோதனை செய்யாத வடகொரியா

4 ஆண்டுகள் ஏவுகணை சோதனை செய்யாத வடகொரியா

அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையால் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வடகொரியா சோதனை செய்திருக்கும் ஏவுகணை 5 ஆண்டுகளுக்கு முன் அது பயன்படுத்திய ஏவுகணையை காட்டிலும் நவீன வடிவமைப்புடன் சக்திவாய்ந்ததாகவும் 6,000 அடி உயரம் வரை சென்றதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.

அன்றே சொன்ன அமெரிக்கா

அன்றே சொன்ன அமெரிக்கா

பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், "வட கொரியா 5,500 கிலோ மீட்டர் தூரம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால், அது அமெரிக்காவை தாக்கும். அவை அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை. வட கொரியா இதை விண்வெளி ஏவுகணை தளம் போல் காட்டுகிறது. இதற்கு அமெரிக்கா சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதன் மூலம் வடகொரியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இருக்கிறது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை பதற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது." என கண்டித்தார்.

அச்சுறுத்தும் வட கொரியா

அச்சுறுத்தும் வட கொரியா

வட கொரியா பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த ஏவுகணை சோதனை தென் கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது அது கையில் எடுத்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அச்சுறுத்தி இருக்கிறது. வல்லரசுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கும் கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    அடங்காத North Korea..மீண்டும் ஆபத்தான Missile Test | Oneindia Tamil
    வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்:

    வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்:

    வட கொரியா வசம் உள்ள வாசாங் 15 என்ற ஏவுகணை 13,000 கி.மீ, தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்டது. வாசாங் 14 ஏவுகணை 10,4000 கி.மீ, வாசாங் 12 - 4,500 கி.மீ. என நெடுந்தூரம் தாக்கும் பல ஏவுகணைகளை வட கொரியம் தன் வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+