குழந்தைச்சாமிக்கு பிடித்த உணவு ‘பெருசு‘ தானாமே!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மாட்டுக்கறி என்றால் அதிக விருப்பம் என தெரிய வந்துள்ளது.
பியாங்ஜியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மாட்டுக்கறியை விரும்பி உண்பார் என தெரிய வந்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்தச் சந்திப்புக்காக கிம் ஜான் உன் இரு நாள்களுக்கு முன்பே சிங்கப்பூர் வந்தார். அவருக்காக வட கொரியாவில் இருந்து தனி கழிவறையும் கொண்டு வந்தனர்.

பிரத்யேக சமையல்காரர்கள்
வடகொரியா அதிபர் கிம் தன்னுடைய நாட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்து பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக இருந்தார். இரு டீகாய் விமானங்கள், தனிக் கப்பலில் கிம்முக்கு தேவையான உணவுகள், அவருக்கான பிரத்யேக சமையல்காரர்கள், கிம் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன.

ட்ரம்புடன் சாப்பிட ஒப்புதல்
செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிபர் கிம் தங்கினாலும் கூட அங்கிருக்கும் உணவுகளைச் சாப்பிடாமல் தன்னுடைய சமையல்காரர்கள் சமைத்த உணவுகளையே அவர் சாப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்பின் சந்திப்புக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுகளை மட்டுமே அதிபர் கிம் சாப்பிட ஒப்புக்கொண்டார்.

எதிரிகள் கைக்கு
மேலும், தனது உடலில் இருந்து வெளியேறும் கழிப்பொருட்கள் சிறுநீர், மலம் ஆகியவை கூட எதிரிகள் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அதிபர் கிம் சொந்தமாக டாய்லெட் கூட கொண்டு வந்தார்.

சாப்பிட பிடிக்குமாம்
இந்நிலையில் ட்ரம்பிற்கு பிடித்த உணவு மற்றும் அவரது பழக்க வழக்கம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கிம்மிற்கு உணவு என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

‘பெருசு‘ பிடிக்கும்
அதிலும் மாட்டு கறியின் மீது அதிக விருப்பம் கொண்ட கிம்முக்கு ஜப்பானில் இருந்து ஸ்பெஷலாக மாடுகள் இறக்கப்படுகிறதாம். பல சொகுசு வீடுகளை கொண்டுள்ள இவருக்கு வடகொரியாவின் பியோங்யங் பகுதியில் உள்ள சொகுசு வீடு என்றால் கொள்ளைபிரியமாம்.

கைக்கடிகாரங்கள்
அந்த வீட்டில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா தியேட்டர் உள்ளதாகவும், 7 மில்லியன் பவுண்ட் கொண்ட கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications