‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மதுபானம் குடிப்பதற்காக மட்டும் ஆண்டுக்கு 198 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என தெரியவந்துள்ளது.
Recommended Video

பியாங்ஜியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மதுவுக்காக மட்டும் ஆண்டுக்கு 198 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என தெரியவந்துள்ளது.
மிகவும் கொடூரக்காரர், கோபக்காரர், எதிர்த்தால் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு மரண தண்டனை என பல அதிர வைக்கும் தகவல்களுக்கு சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
34 வயதே ஆன கிம், தொடர் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு வடகொரிய அதிபரானார் கிம்.

வறுமையில் வாடும் மக்கள்
தனி ராஜாங்கத்துடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கிம். ஆனால் வடகொரிய மக்கள் இன்னமும் வறுமையில்தான் வாடி வருகின்றனர்.

ட்ரம்புடன் சந்திப்பு
காரணம் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைதான். வடகொரியாவில் வறுமை தலைவிரித்தாடும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கிம் ட்ரம்ப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

பழக்கவழக்கம் ரகசியம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது உடல்நிலை, பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து எந்த தகவலும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கிம்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் தி ஸ்குவாண்டர் என்ற இணையதளம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த தகவல்கள் மற்றும் கிம் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பு மற்றும் பழக்கவழக்கத்தை வெளியிட்டுள்ளது.

8 பில்லியன் பவுண்ட்
அதாவது 2018-ஆம் ஆண்டு கிம்மின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

போதை பொருள் கடத்தல்
இதில் பாதியை கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது. அதாவது தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது.

440 மில்லியன் பவுண்ட்
கிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூறியுள்ளார். கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார்.

சரக்குக்கு ரூ. 198 கோடி
அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கு மட்டும் செலவு செய்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 198 கோடி ஆகும்.

பனிச்சறுக்கு ரிசார்ட்
5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல், குண்டு துளைக்காத மெர்சிடஸ் கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும் 25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications