கர்ப்பம்னு சொன்னாங்களே.. டக்குனு 5 மாசத்துல வந்துட்டாரே.. அதுவும் பப்ளிக்கா.. மனைவியுடன் "கூல்" கிம்
வடகொரியா அதிபர் மனைவி 5 மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றினார்
பியாங்யாங்: கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் மனைவி...!
அந்த காலத்தில் இருந்தே, ராஜகுடும்பங்களில் என்ன நடப்பது என்று வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.. வடகொரியாவும் அப்படித்தான்.
எத்தனையோ புதிர்கள், எத்தனையோ சர்ச்சைகள், எத்தனையோ குழப்பங்கள் அந்த ராஜ குடும்பத்தில் நிலவி வருகிறது.. திடீரென அந்த நாட்டு அதிபரே அடிக்கடி மாயமாகி போய்விடுவார்.. எப்படி வருவார், எங்கே வருவார்ன்னு யாருக்குமே தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா மக்கள் முன் தோன்றிவிடுவார்..

ராஜகுடும்பம்
இப்போது கொரோனா காலகட்டம் என்பதால், அந்த குடும்பத்தினர் யாரையுமே வெளியில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை.. எப்போதாவதுதான் வெளியே வருவார்கள்.. பொது நிகழ்ச்சிகளில், பொதுவெளியில் வருவதில்லை... அதிலும் அதிபர் கிம் மனைவி ரி சோல் ஜுயை ரொம்ப நாட்களாகவே ஆளை காணோம்.. என்ன ஆனார்? அவருக்கு உடம்பு சரியில்லையா? என்ற சந்தேகங்கள் எழுந்தன.. பிறகு கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.. அதுவும் உண்மையா என்று தெரியவில்லை..

கர்ப்பமா?
கிம் ரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை இல்லை.. இந்நிலையில், வட கொரியாவின் புத்தாண்டை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலையரங்கில் நடைபெற்றக் கலை நிகழ்ச்சிக்கு மனைவியுடன் வந்திருந்தார் கிம்.. கடைசியாக இவர் கடந்த செப்டம்பர் 9, 2021ல், குமுசுசன் மாளிகைக்கு கணவருடன் சென்றார்... அந்த மாளிகையில் கிம்மின் தந்தை, தாத்தா ஆகியோரின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன..

ஜோடி
5 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் வெளியே வருகிறார் கிம் மனைவி.. இந்த ஜோடியை பார்த்ததும் மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.. அங்கிருந்த கலைஞர்களுக்கு கிம் ஜோடி கைகுலுக்கி வாழ்த்து சொன்னது.. அவர்களுடன் போட்டோவும் எடுத்து கொண்டது.. ஆனால் 5 மாதங்கள் கிம் மனைவிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.. ஒருவேளை கர்ப்பம்தானா? குழந்தை பிறந்துதான் வெளியே வந்திருக்கிறாரா? அதுவும் தெரியவில்லை..

மாயம்
ஆனால், டக் டக்கென மாயமாவது அந்த குடும்பத்தினருக்கு ஒரு ஹாபி போலும்.. மக்களுக்கு ஆயிரம் டார்ச்சர் தந்தாலும், ஒரு விஷயத்தில் கிம்மை மனதார பாராட்டலாம்.. கிம்மின் அப்பாவுக்கு நிறைய மனைவிகளாம்.. ஆனால், அதில் ஒருத்தரை கூட வெளியே அழைத்து வர மாட்டாராம்.. வீட்டிற்குள்ளேயே பொத்தி பொத்தி வைத்து கொள்வாராம்.. அந்த விஷயத்தில் கிம் கொஞ்சம் மாறுபட்டுள்ளார். மனைவியை வெளியே அழைத்து வருகிறார்.. கலாச்சார, கலை நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாது ராணுவ நிகழ்வுகளுக்கும் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஒரு விஷயம்தான் அதிபர் கிம்மிடம் உருப்படியாக இருக்கும்போல..!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications